'குணா' படத்தை சந்தானபாரதி இயக்கவில்லை.. ஒளிப்பதிவாளர் கூறிய அதிர்ச்சி தகவல்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
மலையாளத் திரைப்படமான ’மஞ்சும்மல் பாய்ஸ்’ திரைப்படம் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற பின்னர் தான் 'குணா’ திரைப்படத்தின் அருமை தற்போது தமிழக ரசிகர்களுக்கு தெரிந்து உள்ளது. 'குணா’ திரைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி வரும் நிலையில் இந்த படம் குறித்த பழைய செய்திகள் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.
அந்த வகையில் மலையாள மீடியா ஒன்று 'குணா’ படத்தின் ஒளிப்பதிவாளர் வேணு என்பவரை பேட்டி எடுத்தபோது அந்த பேட்டியில் அவர் 'குணா’ படத்தை சந்தான பாரதி இயக்கவில்லை என்றும் அவர் எப்போதாவது தான் படப்பிடிப்புக்கு வருவார் என்றும் இந்த படத்தை முழுக்க முழுக்க இயக்கியது கமல்ஹாசன் தான் என்றும் கூறினார்.
இந்த தகவல் தமிழக ரசிகர்களுக்கு பெரிய ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்காது. ஏனென்றால் 'குணா’ திரைப்படம் வெளியான போதே இந்த படத்தை சந்தான பாரதி இயக்கியிருக்க வாய்ப்பே இல்லை என்றும் கமல்ஹாசன் தான் இந்த படத்தை இயக்கியிருப்பார் என்றும் பெரும்பாலான ரசிகர்கள் கருத்து தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த படம் மட்டுமின்றி ’தேவர் மகன்’ ’குருதிப்புனல்’, ‘அன்பே சிவம்’ உள்ளிட்ட படங்களையும் கமல்ஹாசன் தான் இயக்கினார் என்றும் ஆனால் டைட்டில் மட்டும் தான் வேறு சில இயக்குனர்களின் பெயர்கள் பயன்படுத்தப்பட்டதாகவும் அப்போதே ரசிகர்கள் மத்தியில் கருத்துக்கள் நிலவியது என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது அதை உறுதி செய்யும் வகையில் 'குணா’ படத்தின் ஒளிப்பதிவாளர் இந்த படத்தின் இயக்குனர் கமலஹாசன் தான் என்று பேட்டியளித்து உள்ளார்.
Guna Cinematographer Venu
— 𝗕𝗥𝗨𝗧𝗨 (@Brutu24) March 5, 2024
" Santhana Bharati didn't directed Guna. It was Kamal Hassan. Santhana Bharati didn't even came to the shooting spot for the majority of the days "#ManjummelBoys pic.twitter.com/19S7jwfA39
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com