'வடக்குப்பட்டி ராமசாமி' உள்பட இந்த வாரம் எத்தனை திரைப்படங்கள்? ஓடிடி ரிலீஸ் தகவல்..!

  • IndiaGlitz, [Thursday,March 14 2024]

சந்தானம் நடித்த ’வடக்குப்பட்டி ராமசாமி’ என்ற திரைப்படம் நாளை முதல் ஓடிடியில் வெளியாக இருக்கும் நிலையில் இந்த வாரம் வெளியாகும் ஓடிடி ரிலீஸ் படங்கள் குறித்த தகவலை தற்போது பார்ப்போம்.

சந்தானம் நடித்த ’வடக்குப்பட்டி ராமசாமி’ திரைப்படம் கடந்த மாதம் திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் நாளை முதல் இந்த படம் ஆகா ஓடிடியில் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. திரையரங்குகளை போலவே ஓடிடியிலும் இந்த படம் பெரும் வரவேற்பு பெரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதை போல் டெண்ட்கொட்டா என்ற ஓடிடியில் ‘நந்திவர்மன்’ என்ற தமிழ் படம் வெளியாக உள்ளது. மேற்கண்ட இந்த இரண்டு தமிழ்ப்படங்கள் மட்டும் இந்த வாரம் ஓடிடியில் வெளியாகவுள்ளது.

ஆனால் அதே நேரத்தில் மலையாளத்தில் வெளியான சூப்பர்ஹிட் படமான மம்முட்டியின் ‘பிரம்மயுகம்’ சோனி லைவ் ஓடிடியில், ‘ஆட்டம்’ என்ற மலையாள திரைப்படம் அமேசான் ப்ரைம் ஓடிடியில் நாளை முதல் வெளியாகவுள்ளது.

மேலும் இந்தியா முழுவதும் பெரும் வசூலை வாரி குவித்த பாலிவுட் திரைப்படமான ‘அனுமன்’ ஜியோ சினிமா ஓடிடியில் வெளியாக உள்ளது.

 

More News

அடுத்தடுத்து 3 படங்களை முடித்துவிட்ட கவின்.. 46 நாட்களில் முடிந்த படப்பிடிப்பு..!

கவின் நடித்து வந்த 'ஸ்டார்' மற்றும் 'கிஸ்' ஆகிய இரண்டு படங்களின் படப்பிடிப்பு ஏற்கனவே முடிந்து தொழில்நுட்ப பணிகள் நடைபெற்று வரும் நிலையில் தற்போது இன்னொரு படத்தின் படப்பிடிப்பு முடிந்து விட்டதாக

14 வருடங்களுக்கு பின் கேரளா செல்லும் விஜய்.. அங்கேயும் வேன் மேல் ஏறி செல்பி உண்டா?

தளபதி விஜய் 14 ஆண்டுகளுக்கு பின்னர் கேரளாவுக்கு படப்பிடிப்புக்காக செல்ல இருப்பதை அடுத்து அங்கும் ரசிகர்கள் முன்னிலையில் வேன் மேல் ஏறி செல்பி புகைப்படம் எடுப்பாரா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

இந்தியாவில் 18 ஓடிடி தளங்கள் முடக்கம்.. தமிழ் ஓடிடி தளம் உண்டா? முழு பட்டியல்..!

ஆபாச காட்சிகள் மற்றும் பெண்களை இழிவுபடுத்தும் வகையில் சித்தரிக்கப்பட்ட காட்சிகள் ஒளிபரப்பப்பட்டதாக இந்தியாவில் 18 ஓடிடி தளங்கள் தடை செய்யப்படுவதாக மத்திய தகவல்

லிவிங் டுகெதர் வாழ்க்கைக்கு எண்ட்-கார்டு? திருமண தேதியை அறிவித்த அமீர்-பாவனி..!

பிக் பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளர்களான அமீர் மற்றும் பாவனி கடந்த சில மாதங்களாக லிவிங் டுகெதர் வாழ்க்கை நடத்தியதாக கூறப்பட்ட நிலையில் தற்போது இருவரும் அளித்த பேட்டியில் தங்களது திருமண தேதியை

டிஸ்னி ஹாட்ஸ்டாரில் சூப்பர் ஹிட் 'லவ்வர்' திரைப்படம்.. ஸ்ட்ரீமிங் தேதி அறிவிப்பு..!

டிஸ்னி+ ஹாட்ஸ்டார்  நடிகர் மணிகண்டன் நடிப்பில், சமீபத்திய பிளாக்பஸ்டர் திரைப்படமான 'லவ்வர்' படத்தை, வரும் மார்ச் 27 முதல், ஸ்ட்ரீம் செய்ய உள்ளது