நான் விஷாலும் இல்லை, சிம்புவும் இல்லை.. எவனும் பொண்ணு தர மாட்டேங்குறான்” இங்க நான்தான் கிங்கு' டிரைலர்..!

  • IndiaGlitz, [Friday,April 26 2024]

நடிகர் சங்கம் கட்டிடம் கட்டிவிட்டு தான் திருமணம் செய்து கொள்வேன் என்று சொல்வதற்கு நான் விஷாலும் அல்ல, எப்பவும் சிங்கிளாக சுற்றிக் கொண்டிருக்கும் சிம்புவும் அல்ல, எவனும் எனக்கு பெண் தர மாட்டேங்குறான் என்று சந்தானம் பேசும் வசனத்தோடு ’இங்க நான் தான் கிங்கு’ என்ற படத்தின் டிரைலர் ஆரம்பிக்கிறது.

சந்தானம் நடிப்பில் உருவான 'இங்க நான் தான் கிங்கு’ என்ற படத்தின் படப்பிடிப்பு மற்றும் தொழில்நுட்ப முடிவடைந்து வரும் மே பத்தாம் தேதி ரிலீஸ் ஆக இருக்கும் நிலையில் இந்த படத்தின் டிரைலர் சற்று முன் வெளியாகி இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

ஆனந்த நாராயணன் இயக்கத்தில், டி இமான் இசையில், கோபுரம் பிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகி உள்ள இந்த படம் முழுக்க முழுக்க காமெடி அம்சம் கொண்டது என்பது இந்த படத்தின் டிரைலரில் இருந்து தெரிய வருகிறது.

இவ்வளவு பிரமாண்டமாக திருமணம் நடத்துவீர்கள் என்று நினைத்திருந்தால் அதை வீடியோவாக எடுத்து நெட்பிளிக்ஸ் ஓடிடியில் விற்பனை செய்திருக்கலாம் என்று விஷால், சிம்பு மட்டுமின்றி நயன்தாராவையும் போகிற போக்கில் கலாய்க்கும் வகையில் இந்த படத்தில் வசனம் உள்ளது.

பெண் கிடைக்காமல் இருந்த சந்தானத்திற்கு ஒரு வழியாக ஜமீன் பரம்பரையில் பெண் கிடைத்து திருமணம் ஆன நிலையில் திடீரென மாமனாருக்கும் சந்தானத்திற்கும் பிரச்சனை வருகிறது. இதனை அடுத்து திடீர் திருப்பமாக சந்தானம் ஒரு தீவிரவாதி என்று தொலைக்காட்சியில் செய்தி வர அவரது குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் அதிர்ச்சி அடைகின்றனர். அதன் பிறகு என்ன ஆனது? சந்தானம் உண்மையில் யார்? என்பது தான் இந்த படத்தின் கதை என்பது ட்ரெய்லரில் இருந்து தெரிய வருகிறது.

காமெடி ரொமான்ஸ் மற்றும் ஆக்சன் என அனைத்து அம்சங்களும் கலந்த இந்த படம் மே பத்தாம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் நிச்சயம் இந்த படம் சந்தானத்திற்கு இன்னொரு வெற்றி படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.