சந்தானம் நடித்த 'டிக்கிலோனா'வுக்கு சென்சார் சான்றிதழ்
Send us your feedback to audioarticles@vaarta.com
நடிகர் சந்தானம் நடித்த ’பாரிஸ் ஜெயராஜ்’ திரைப்படம் சமீபத்தில் வெளியான நிலையில் அவருடைய அடுத்த திரைப்படமான ’டிக்கிலோனா’ திரைப்படமும் ரிலீசுக்கு தயாராகிவிட்டது. இந்த நிலையில் இந்த படத்தை இன்று சென்சார் அதிகாரிகள் பார்த்த நிலையில் இந்த படத்திற்கு சென்சார் அதிகாரிகள் ’யு’ சான்றிதழ் கொடுத்துள்ளனர். இந்த படத்திற்கு ’யு’ சான்றிதழ் கிடைத்துள்ளதை தயாரிப்பு நிறுவனம் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து விரைவில் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என தயாரிப்பாளர் தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.
மூன்று வேடங்களில் சந்தானம் நடித்துள்ள இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக அனைகா, ஷிரின் ஆகியோர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு இசைஞானி இளையராஜா மற்றும் யுவன் சங்கர் ராஜா ஆகிய இருவரும் இணைந்து இசையமைத்துள்ளனர். இந்த படத்தில் ’பேர் வச்சாலும் வைக்காம’ என்ற கமல்ஹாசனின் ‘மைக்கேல் மதனகாமராஜன்’ படத்தின் பாடல் ரீமிக்ஸ் செய்யப்பட்டுள்ளது என்பதை ஏற்கனவே பார்த்தோம்.
சந்தானம், அனைகா, ஷிரின், மொட்ட ராஜேந்திரன், முனீஸ்காந்த், ஆனந்தராஜ் உள்பட பலர் நடித்துள்ள இந்த திரைப்படம் சந்தானத்தின் அடுத்த வெற்றிப் படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
It is a U, yuvar honour! ??
— KJR Studios (@kjr_studios) March 25, 2021
Get ready for a fun aana, clean aana, kuthoogalamaana entertainer!#Dikkiloona @iamsanthanam @thisisysr @karthikyogitw @kjr_studios @SoldiersFactory @sinish_s @AnaghaOfficial @KanchwalaShirin @iYogiBabu @twitavvi @J0min @Dineshsubbaray1 pic.twitter.com/bTO3me2aXC
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com