திருமணம் குறித்து மனம்திறந்த நடிகை ஸ்ருதிஹாசனின் காதலர் சாந்தனு… வைரலாகும் தகவல்!
Send us your feedback to audioarticles@vaarta.com
உலகநாயகன் கமல்ஹாசனின் மூத்த மகளும் முன்னணி நடிகையுமான ஸ்ருதிஹாசன் மும்பையைச் சேர்ந்த பிரபல டூடுல் கலைஞர் சாந்தனு ஹசாரிகா என்பவரைக் காதலித்து வருவது ரசிகர்களுக்கு தெரிந்ததுதான். இந்நிலையில் திருமணம் குறித்து சாந்தனுவிடம் கேள்வி கேட்கப்பட்டபோது அவர் ஒரு சுவாரசியமான பதிலை அளித்துள்ளார். இது இணையத்தில் வைரலாகி வருகிறது.
தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி மொழி சினிமாக்களில் முன்னணி நடிகையாக இருந்துவரும் நடிகை ஸ்ருதிஹாசன் நடிப்பைத் தவிர இசையிலும் தீவிர ஆர்வம் கொண்டவர் என்பது பலருக்கும் தெரிந்திருக்கும். இந்நிலையில் அவர் பிரபல டூடுல் கலைஞர் சாந்தனு ஹசாரிகாவை காதலித்து வருகிறார். மேலும் அவர்கள் மும்பையில் ஒன்றாக தங்களது நேரத்தை செலவிட்டு வருகின்றனர். இந்நிலையில் சாந்தனுவிடம் திருமணம் குறித்து கேள்வி கேட்கப்பட்டு இருக்கிறது.
அதற்கு பதிலளித்த சாந்தனு, இப்போதுதான் நாங்கள் டேட்டிங் செய்ய ஆரம்பித்துள்ளோம். நாங்கள் ஒருவரையொருவர் நேசிக்கிறோம். மேலும் கலை, இசை என பல வழிகளிலும் செல்வாக்கு செலுத்துதல் மற்றும் ஆடைகளை வடிவமைத்தல் போன்ற பல ஆக்கப்பூர்வமான செயல்பாடுகளில் ஈடுபட்டு வருகிறோம். எனவே இது எங்கள் இருவருக்கம் ஒரு ஆக்கப்பூர்வமான பயணமாகும்.
மேலும் நாங்கள் இருவரும் படைப்பு குறித்து உரையாடுகிறோம். இது உண்மையில் ஊக்கமளிப்பதோடு முன்னோக்கி செல்லவும் உதவுகிறது. நான் எப்போதும் ஸ்ருதிஹசனால் ஈர்க்கப்பட்டதைப் போல அவரும் என்னால் ஈர்க்கப்பட்டதாக கூறியிருக்கிறார். இதுதான் எங்களுக்குள் இருக்கும் உறவு என்று தங்களது உறவுநிலையை பற்றி விளக்கியிருக்கிறார்.
மேலும் ஸ்ருதிஹாசனோடு இருப்பது குறித்து பேசிய சாந்தனு நாங்கள் இருவரும் சிறந்த நண்பர்களாகவே நடந்துகொள்கிறோம். இதனால் வேடிக்கையான விஷயங்களோடு கலையையும் இசையையும் பற்றி உரையாடிக் கொள்ள முடிகிறது. இது ஆக்கப்பூர்வமான உரையாடலாக இருக்கிறது. இது படைப்பாற்றலுக்கான தருணம். திருமணத்தைவிட இதைத்தான் நான் பெரிதாக நினைக்கிறேன் என்று சாந்தனு ஹசாரிகா பதிலளித்துள்ளார்.
இசை, படைப்பு, கலை குறித்து சாந்தனு ஹசாரிகா அளித்துள்ள இந்தப் பதில் ரசிகர்களிடையே கடும் ஆச்சர்யத்தையும் வியப்பையும் ஏற்படுத்தியிருக்கிறது. இதனால் காதலைவிடவும் சிறந்த கலைஞர்களாக இருக்கும் நடிகை ஸ்ருதிஹாசனுக்கும் சாந்தனுவிற்கு ரசிகர்கள் தங்களது பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com
Comments