தூக்கு தண்டனை விதிக்கப்பட்டாலும் இன்னும் எனக்கு பயம் உள்ளது: சங்கர் மனைவி கவுசல்யா
Send us your feedback to audioarticles@vaarta.com
உடுமலையில் கவுசல்யாவின் கணவர் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் சமீபத்தில் குற்றவாளிகளுக்கு தூக்குதண்டனை கிடைத்துள்ள நிலையில் சற்றுமுன் கவுசல்யா செய்தியாளர்களை சந்தித்தார்.
இந்த சந்திப்பின்போது, 'ஆணவப் படுகொலையை தடுக்க தனிச்சட்டம் இயற்ற வேண்டும் என்ற கோரிக்கையை அவர் அரசிடம் முன்வைத்துள்ளார். ஜாதிகளுக்கு எதிரான தனது போராட்டம் தனது உயிர் இருக்கும் வரை தொடரும் என்று குறிப்ப்பிட்ட கவுசல்யா, தனது தம்பிகளுடன் தான் இருந்த புகைப்படத்தை இழிவாக சிலர் விமர்சிப்பது அவர்களுடைய மனநிலை பாதிப்பின் உச்சக்கட்டத்தை வெளிப்படுத்துவதாக தெரிவித்தார்.
மேலும் ஆணவப்படுகொலை வழக்கில் குற்றவாளி என அறிவிக்கப்பட்ட சின்னசாமியை எனது தந்தை என்று தயவு செய்து கூற வேண்டாம் என்றும், நான் அவருடைய மகள் இல்லை என்றும் வெறுப்புடன் தெரிவித்தார். மரண தண்டனை விதிக்கப்பட்டாலும், அந்த தண்டனை உடனே நிறைவேற்றப்படப் போவதில்லை என்பதால் தனக்கு
இன்னமும் அவர்கள் என்ன செய்வார்களோ என்ற அச்சம் உள்ளதாகவும் கவுசல்யா தெரிவித்தார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout