தூக்கு தண்டனை விதிக்கப்பட்டாலும் இன்னும் எனக்கு பயம் உள்ளது: சங்கர் மனைவி கவுசல்யா 

  • IndiaGlitz, [Friday,December 15 2017]

உடுமலையில் கவுசல்யாவின் கணவர்  படுகொலை செய்யப்பட்ட வழக்கில் சமீபத்தில் குற்றவாளிகளுக்கு தூக்குதண்டனை கிடைத்துள்ள நிலையில் சற்றுமுன் கவுசல்யா செய்தியாளர்களை சந்தித்தார்.

இந்த சந்திப்பின்போது, 'ஆணவப் படுகொலையை தடுக்க தனிச்சட்டம் இயற்ற வேண்டும் என்ற கோரிக்கையை அவர் அரசிடம் முன்வைத்துள்ளார். ஜாதிகளுக்கு எதிரான தனது போராட்டம் தனது உயிர் இருக்கும் வரை தொடரும் என்று குறிப்ப்பிட்ட கவுசல்யா, தனது தம்பிகளுடன் தான் இருந்த புகைப்படத்தை இழிவாக சிலர் விமர்சிப்பது அவர்களுடைய மனநிலை பாதிப்பின் உச்சக்கட்டத்தை வெளிப்படுத்துவதாக தெரிவித்தார்.

மேலும் ஆணவப்படுகொலை வழக்கில் குற்றவாளி என அறிவிக்கப்பட்ட சின்னசாமியை எனது தந்தை என்று தயவு செய்து கூற வேண்டாம் என்றும், நான் அவருடைய மகள் இல்லை என்றும் வெறுப்புடன் தெரிவித்தார்.  மரண தண்டனை விதிக்கப்பட்டாலும், அந்த தண்டனை உடனே நிறைவேற்றப்படப் போவதில்லை என்பதால் தனக்கு
இன்னமும் அவர்கள் என்ன செய்வார்களோ என்ற அச்சம் உள்ளதாகவும் கவுசல்யா தெரிவித்தார்.

More News

வில்லன் வேடத்தை விஷால் விரும்பியது ஏன்? இயக்குனர் மித்ரன்

விஷால் நடித்து வரும் திரைப்படம் 'இரும்புத்திரை'. இந்த படம் வரும் ஜனவரி 26ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில் இந்த படம் குறித்து இயக்குனர் மித்ரன் சில சுவாரஸ்ய தகவல்களை கூறியுள்ளார்.

பெரியபாண்டி குடும்பத்துக்கு நிதி திரட்ட ஆரம்பிக்கப்பட்ட வங்கிக்கணக்கு திடீர் மூடல்

ராஜஸ்தான் கொள்ளையர்களால் சுட்டுக்கொல்லப்பட்டு வீரமரணம் அடைந்த பெரியபாண்டிக்கு தமிழக அரசு ரூ.1 கோடி நிதியுதவி வழங்கியுள்ளது. அதுமட்டுமின்றி அவரது மகனின் முழு கல்விச்செலவையும் தமிழக அரசே ஏற்றுக்கொண்டது.

ஆதார் எண்ணை இணைக்க மக்களை கட்டாயப்படுத்தக்கூடாது: சுப்ரீம் கோர்ட் உத்தரவு

ஆதார் அட்டை என்பது ஒவ்வொரு இந்திய குடிமகனுக்கும் இன்றியமையாத ஒன்றாகிவிட்ட நிலையில் அனைத்து ஆவணங்களிலும் ஆதார் எண்ணை இணைக்க மத்திய அரசு கெடு விதித்துள்ளது.

இளைஞர்களை ஊக்குவிக்க விஜய் தவறியதே இல்லை: சிபிராஜ்

சிபிராஜ் நடித்த 'சத்யா' திரைப்படம் சமீபத்தில் வெளியாகி ஊடகங்கள் மற்றும் விமர்சகர்களின் பாராட்டுக்களை பெற்று திரையரங்குகளில் வெற்றிநடை போட்டு வருகிறது.

ரியல் தீரன் குடும்பத்தினர்களுக்கு ரீல் தீரன் ஆறுதல்

சென்னை கொளத்தூர் நகைக்கடையில் கொள்ளையடித்த கும்பலை பிடிக்க ராஜஸ்தான் சென்ற தனிப்படையில் இருந்த பெரியபாண்டியன் சமீபத்தில் ராஜஸ்தான் கொள்ளையர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார்.