சங்கர் கொலை வழக்கில் நாளை தீர்ப்பு: மனசாட்சிப்படி தீர்ப்பு வழங்க தந்தை வேண்டுகோள்
Send us your feedback to audioarticles@vaarta.com
கடந்த ஆண்டு தமிழகத்தையே குலுங்க வைத்த உடுமலை சங்கர் கொலை வழக்கின் தீர்ப்பு நாளை வெளிவரவுள்ளது. இந்த வழக்கின் தீர்ப்பு மீண்டும் இதே போன்ற ஒரு சம்பவம் நடைபெறாமல் இருக்கும் வகையில் மனசாட்சியின்படி ஒரு நல்ல தீர்ப்பாக இருக்க வேண்டும் என சங்கரின் தந்தை வேலுச்சாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்
திருப்பூர் மாவட்டம் உடுமலையில் கல்லூரி மாணவரான சங்கர் கல்லூரி மாணவியான கவுசல்யாவை காதலித்தார். ஆனால் ஜாதியை காரணம் காட்டி இந்த காதலுக்கு கவுசல்யா வீட்டில் எதிர்ப்பு கிளம்பியது. இதனால் இருவரும் பெற்றோர்களுக்கு தெரியாமல் திருமணம் செய்து கொண்டனர். ஆனால் திருமணமான ஒருசில நாட்களில் உடுமலை பேருந்து நிலையத்தில் சங்கர் வெட்டி கொல்லப்பட்டார். இந்த வழக்கில் கவுசல்யாவின் தாய், தந்தை மற்றும் உறவினர்கள் கைது செய்யப்பட்டு, கடந்த ஒன்றரை வருடங்களாக விசாரணை நடந்து வந்தது
இந்த நிலையில் இந்த வழக்கை விசாரணை செய்து வரும் நீதிபதி அலமேலு, நாளை இந்த வழக்கின் தீர்ப்பை வழங்கவுள்ளார். இந்த நிலையில் இன்று செய்தி சேனலு ஒன்றுக்கு பேட்டியளித்த சங்கரின் தந்தை வேலுச்சாமி, இந்த தீர்ப்பு மனசாட்சியின்படி ஒரு நல்ல தீர்ப்பாக இருக்க வேண்டும்' என்று கூறியுள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Contact at support@indiaglitz.com