ஒருநாள் போட்டியில் அதிவேக இரட்டைச்சதம்: கேரள வீரரின் சாதனை
Send us your feedback to audioarticles@vaarta.com
விஜய் ஹசாரே டிராபி கிரிக்கெட் போட்டி தொடர் தற்போது நடைபெற்று கொண்டிருக்கும் நிலையில் நேற்று கோவா மற்றும் கேரள அணிகளுக்கு இடையே ஒருநாள் கிரிக்கெட் போட்டி நடைபெற்றது.
இந்த போட்டியில் கேரளா அணியின் விக்கெட் கீப்பர் மற்றும் பேட்ஸ்மேன் சஞ்சு சாம்சன் என்பவர் அதிவேக இரட்டை சதம் அடித்து சாதனை செய்துள்ளார். இவர் 129 பந்துகளில் 212 ரன்கள் அடித்துள்ளார். இதில் 10 சிக்ஸர்கள் மற்றும் 20 பவுண்டரிகள் அடங்கும்.
இந்த சாதனையால் இரட்டைச்சதம் அடித்த 6வது இந்திய வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார். இதற்கு முன் சச்சின், சேவாக், ரோஹித் சர்மா, தவான் மற்றும் கெளசல் ஆகியோர் இரட்டை சதம் அடித்துள்ளனர். மேலும் உலகிலேயே ஒருநாள் போட்டியில் அதிவேக இரட்டைச்சதம் அடித்த வீரர்களில் இரண்டாவதாக சஞ்சு சாம்சன் உள்ளார். ஆஸ்திரேலியாவின் டிராவிஸ் ஹெட் 120 பந்துகளில் இரட்டைச்சதம் அடித்த நிலையில் சஞ்சு, 125 பந்துகளில் இரட்டைச்சதம் அடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments