ஒரே நேரத்தில் அப்பாவாகும் ஒரே இயக்குனரின் ஹீரோக்கள்

  • IndiaGlitz, [Thursday,March 05 2020]

விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘ராஜா ராணி’ சீரியலின் ஹீரோ சஞ்சிவ் மற்றும் இந்த சீரியலில் நாயகி ஆல்யா சமீபத்தில் திருமணம் செய்து கொண்ட நிலையில் தற்போது ஆல்யா கர்ப்பமாகவுள்ளார். இந்த நிலையில் ‘நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா’ படத்தின் நாயகன் ரியோராஜ் மனைவி ஸ்ருதியும் தற்போது கர்ப்பமாக உள்ளார்.

ரியோ ராஜ், சஞ்சீவ் ஆகிய இருவரும் விரைவில் அப்பாவாக உள்ள நிலையில் சஞ்சீவ் தனது சமூக வலைத்தளத்தில் ஒரு பதிவை பதிவு செய்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: ஒரே டைரக்டருக்கு ஹீரோ, ஒரே டைம்ல டாடி ஆகப்போறோம். ஒரே ஹாஸ்பிட்டல்ல பாக்குறோமே. ரியோ, ஸ்ருதிக்கு வாழ்த்துக்கள் என்று கூறியுள்ளார்.

சஞ்சீவ் கார்த்திக் தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் ஒன்றில் நடிக்கின்றார் என்பதும், ரியோ ராஜ் நடித்து முடித்துள்ள ‘பிளான் பண்ணி பண்ணனும் என்ற திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

More News

ரூ.50 கோடி கடன்: பிரபல நடிகரின் தம்பி தற்கொலை

தமிழ் திரையுலகின் பிரபல வில்லன் மற்றும் காமெடி நடிகரான ஆனந்தராஜ் சகோதரர் 50 கோடி ரூபாய் கடன் காரணமாக தற்கொலை செய்து கொண்டதாக வெளிவந்துள்ள தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

ஹுவாயின் புதிய பட்ஜெட் மொபைல்கள்.. அசத்தும் specifications..!

பட்ஜெட் போனில் 10W சார்ஜிங் ஆதரவுடன் 4,000 எம்ஏஎச் பேட்டரி உள்ளது. Huawei P40 Lite E 15,9.81x76.13x8.13மிமீ அளவு மற்றும் வெறும் 176 கிராம் எடை கொண்டதாகும்.

ரஜினியை அடுத்து கமல்ஹாசனை சந்தித்த போராட்டக்கார்ரகள்

சமீபத்தில் மத்திய அரசு அறிமுகம் செய்த சிஏஏ சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் முஸ்லிம் அமைப்புகள் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களை நேரில் சந்தித்து பேசினார்கள்

மனிதர்களிடம் இருந்து நாய்களுக்கு பரவியுள்ள கொரோனா வைரஸ்..! இப்படி நடப்பது இதுதான் முதல் முறை.

நாய்களுக்கு கொரோனா வைரஸ் பரவியுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதுதான் முதன் முதலாக மனிதலிருந்து விலங்குகளுக்கு பரவிய வைரஸாகும்.

காசியாபாத்தில் மேலும் ஒரு கொரோனா வைரஸ் நோயாளி..!

ஏற்கனேவே இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பதாக உறுதிபடுத்தப்பட்டவர்கள் 29 பேர். இன்று இவரோடு சேர்த்து 30 நபராக எண்ணிக்கை கூடியுள்ளது.