சன் டிவி தொடரில் இருந்து திடீரென விலகிய சஞ்சீவ்.. சஞ்சீவ் கேரக்டரில் புது மாப்பிள்ளை?
- IndiaGlitz, [Thursday,December 05 2024]
சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் லட்சுமி என்ற சீரியலில் கதாநாயகனாக சஞ்சீவி நடித்து வந்த நிலையில், அந்த சீரியலில் இருந்து திடீரென அவர் விலகி விட்டதாகவும், அவருக்கு பதிலாக சமீபத்தில் திருமணம் ஆன நடிகர் தான் அந்த கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.
சன் டிவியில் சஞ்சீவ் மற்றும் ஸ்ருதி ராஜ் முக்கிய வேடங்களில் நடித்த லட்சுமி என்ற தொடர் கடந்த சில மாதங்களுக்கு முன் தொடங்கப்பட்ட நிலையில், இந்த தொடர் பார்வையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. சஞ்சீவ் மற்றும் ஸ்ருதி ராஜ் ஆகிய இருவருக்கும் கெமிஸ்ட்ரி சூப்பராக வொர்க் அவுட் ஆகி வருவதாக கமெண்ட்ஸ்களும் பதிவாகின்றன.
இந்த நிலையில் திடீரென சஞ்சீவ் இந்த தொடரில் இருந்து விலகி விட்டதாக கூறப்பட்டாலும், இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை அவர் வெளியிடவில்லை. இந்த நிலையில் சஞ்சீவி கதாபாத்திரத்தில் லட்சுமி தொடரில் நடிகர் ஆர்யன் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. சமீபத்தில் தான் இவருக்கும் நடிகை ஸ்ருத்திகாவிற்கும் திருமணம் நடைபெற்ற நிலையில், இருவரும் தற்போது மகராசி தொடரில் ஒன்றாக நடித்திருந்தனர்.
இந்த நிலையில், தற்போது லட்சுமி தொடரில் ஆர்யன் இணைய உள்ளதை அடுத்து, வெல்கம் பேக் ஆர்யன் என்று அவருக்கு ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அதேபோல், சஞ்சீவின் ரசிகர்கள் மிஸ் யூ சஞ்சீவ் என்று சமூக வலைதளங்களில் ட்ரெண்டாக்கி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.