மறுபடியும் இன்னொரு குழந்தையா? குட் நியூஸ் சொல்ல போகும் சஞ்சீவ் - ஆல்யா மானசா..!
Send us your feedback to audioarticles@vaarta.com
சின்னத்திரை நட்சத்திரங்களான சஞ்சீவ் கார்த்திக் மற்றும் ஆல்யா மானசா ஜோடி விரைவில் ஒரு நல்ல செய்தியை சொல்லப் போகிறோம் என்று தங்களது சமூக வலைதளத்தில் தெரிவித்துள்ளதை அடுத்து மறுபடியும் ஒரு குழந்தையா? என்று ரசிகர்கள் கமெண்ட் பகுதியில் பதிவு செய்து வருகின்றனர்.
சின்னத்திரையில் ஜோடியாக நடிக்கும் நடிகர் நடிகைகள் பலர் நிஜமாகவே ஜோடியாக மாறிவிடுகிறார்கள் என்பதும் அந்த வகையில் ’ராஜா ராணி’ என்ற சீரியலில் சஞ்சீவ் கார்த்திக் மற்றும் ஆல்யா மானசா ஜோடியாக நடித்திருந்த நிலையில் சீரியலில் மட்டுமின்றி நிஜத்திலும் அவர்கள் இருவரிடையே கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆனதை அடுத்து 2019 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர்.
இந்த தம்பதிக்கு அடுத்தடுத்து இரண்டு குழந்தைகள் பிறந்தன என்பதும் தங்களது குழந்தைகளின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை இருவருமே தங்களது இன்ஸ்டாகிராமில் பதிவு செய்து வருவார்கள் என்பது தெரிந்தது.
இந்த நிலையில் தற்போது சஞ்சீவ் கார்த்திக் மற்றும் ஆல்யா மானசா ஆகிய இருவருமே தொலைக்காட்சி சீரியல்களில் பிஸியாக இருக்கும் நிலையில் சற்று முன் சஞ்சீவி கார்த்திக் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மிக விரைவில் ஒரு நல்ல செய்தியை உங்களுக்கு சொல்ல போகிறேன் என்று தெரிவித்துள்ளார்.
மேலும் ஆல்யா மானசா இன்ஸ்டா ஐடியையும் அவர் டேக் செய்து ’உங்கள் அனைவரின் ஆசிகள் மற்றும் வாழ்த்துக்களும் தேவை’ என்று கூறியுள்ளதை அடுத்து இருவருக்கும் மூன்றாவது குழந்தை பிறக்கப் போகிறதா? என்று ரசிகர்கள் கமெண்ட் பதிவு செய்து வருகின்றனர். சஞ்சீவ் - ஆல்யா சொல்லப்போகும் அந்த நல்ல செய்தி என்னவாக இருக்கும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com