மறுபடியும் இன்னொரு குழந்தையா? குட் நியூஸ் சொல்ல போகும் சஞ்சீவ் - ஆல்யா மானசா..!

  • IndiaGlitz, [Thursday,May 23 2024]

சின்னத்திரை நட்சத்திரங்களான சஞ்சீவ் கார்த்திக் மற்றும் ஆல்யா மானசா ஜோடி விரைவில் ஒரு நல்ல செய்தியை சொல்லப் போகிறோம் என்று தங்களது சமூக வலைதளத்தில் தெரிவித்துள்ளதை அடுத்து மறுபடியும் ஒரு குழந்தையா? என்று ரசிகர்கள் கமெண்ட் பகுதியில் பதிவு செய்து வருகின்றனர்.

சின்னத்திரையில் ஜோடியாக நடிக்கும் நடிகர் நடிகைகள் பலர் நிஜமாகவே ஜோடியாக மாறிவிடுகிறார்கள் என்பதும் அந்த வகையில் ’ராஜா ராணி’ என்ற சீரியலில் சஞ்சீவ் கார்த்திக் மற்றும் ஆல்யா மானசா ஜோடியாக நடித்திருந்த நிலையில் சீரியலில் மட்டுமின்றி நிஜத்திலும் அவர்கள் இருவரிடையே கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆனதை அடுத்து 2019 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர்.

இந்த தம்பதிக்கு அடுத்தடுத்து இரண்டு குழந்தைகள் பிறந்தன என்பதும் தங்களது குழந்தைகளின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை இருவருமே தங்களது இன்ஸ்டாகிராமில் பதிவு செய்து வருவார்கள் என்பது தெரிந்தது.

இந்த நிலையில் தற்போது சஞ்சீவ் கார்த்திக் மற்றும் ஆல்யா மானசா ஆகிய இருவருமே தொலைக்காட்சி சீரியல்களில் பிஸியாக இருக்கும் நிலையில் சற்று முன் சஞ்சீவி கார்த்திக் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மிக விரைவில் ஒரு நல்ல செய்தியை உங்களுக்கு சொல்ல போகிறேன் என்று தெரிவித்துள்ளார்.

மேலும் ஆல்யா மானசா இன்ஸ்டா ஐடியையும் அவர் டேக் செய்து ’உங்கள் அனைவரின் ஆசிகள் மற்றும் வாழ்த்துக்களும் தேவை’ என்று கூறியுள்ளதை அடுத்து இருவருக்கும் மூன்றாவது குழந்தை பிறக்கப் போகிறதா? என்று ரசிகர்கள் கமெண்ட் பதிவு செய்து வருகின்றனர். சஞ்சீவ் - ஆல்யா சொல்லப்போகும் அந்த நல்ல செய்தி என்னவாக இருக்கும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

 

More News

திருமணத்திற்கு பின்னரும் உள்ளாடை விளம்பரம்.. நடிகை டாப்ஸிக்கு குவியும் கோடிகள்..!

நடிகை டாப்ஸி சமீபத்தில் திருமணம் செய்து கொண்ட நிலையில் திருமணத்துக்கு பின்னரும் அவர் உள்ளாடை விளம்பரத்தில் நடித்த வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள

துபாய் சென்ற ரஜினிக்கு இன்னொரு சர்ப்ரைஸ்.. ஐக்கிய அரபு அமீரக அரசு செய்த கெளரவம்..!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஐக்கிய அரபு அமீரகத்துக்கு சென்றார் என்றும் அங்கு அவர் ஓய்வு எடுத்து வருவதாகவும் கூறப்பட்டது. இந்நிலையில் ஐக்கிய அமீரக அரசு ரஜினிக்கு செய்த

'கல்கி 2898 ஏடி' படத்திற்காக சென்னையில் செய்யப்பட்ட கார்.. தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா ட்விட்..!

பிரபாஸ் நடித்த 'கல்கி 2898 ஏடி' என்ற திரைப்படம் ஜூன் 27ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது என்பது தெரிந்தது.

'ராயன்' செகண்ட் சிங்கிள் பாடலை பாடியது பிரபல இசையமைப்பாளரா?  சன் பிக்சர்ஸ் அறிவிப்பு..!

தனுஷ் நடித்து இயக்கிய 'ராயன்' என்ற திரைப்படம் வரும் ஜூன் 13ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் ப்ரோமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது

ட்ரீம் வாரியர் பிக்சர்ஸின் அடுத்த பட பர்ஸ்ட் லுக்.. நீட் தேர்வால் உயிரிழந்த மாணவி கதையா?

தமிழ் திரையுலகின் முன்னணி தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகும் அடுத்த படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி