சஞ்சய்தத்துக்கு என்ன ஆச்சு? 'கேஜிஎப் 2' படத்தில் இருந்து விலகுகிறாரா?
- IndiaGlitz, [Wednesday,August 12 2020]
பிரபல பாலிவுட் நடிகர் சஞ்சய்தத் திடீரென தான் சிலகாலம் திரையுலகில் இருந்து விலகி இருக்க முடிவு செய்துள்ளதாக அறிவித்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
பிரபல பாலிவுட் நடிகர் சஞ்சய்தத், ‘கேஜிஎப் 2’ உட்பட ஒரு சில படங்களில் தற்போது நடித்துக்கொண்டிருக்கிறார். இந்த நிலையில் அவர் தனது சமூக வலைப்பக்கத்தில் ’நான் சில நாட்கள் மருத்துவ சிகிச்சைக்காக ஓய்வு எடுக்க உள்ளேன். எனக்கு உறுதுணையாக எனது குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் இருப்பதால் எனது உடல்நிலை குறித்து தயவு செய்து யாரும் கவலைப்பட வேண்டாம். உங்களுடைய அன்பு மற்றும் ஆதரவால் நான் விரைவில் மீண்டு வருவேன் என்று கூறியுள்ளார். சஞ்சய் தத்தின் இந்த பேஸ்புக் பதிவால் அவரது ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்
சமீபத்தில் மூச்சுத்திணறல் காரணமாக சஞ்சய்தத், மும்பையில் உள்ள லீலாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என்பதும் அதன் பின்னர் டிஸ்சார்ஜ் ஆகி வீடு திரும்பினார் என்பதும் தெரிந்ததே. இந்த நிலையில் அவர் தற்போது நுரையீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும் இதற்காக சிகிச்சை செய்ய அவர் அமெரிக்கா செல்ல இருப்பதாகவும் கூறப்படுகிறது
இதனால் அவர் ’கேஜிஎப் 2’ உள்பட ஒரு சில படங்களில் நடிக்க ஒப்பந்தமான படங்களில் இருந்து விலகுவார் என்று எதிர்பார்க்கப்படுவதால் திரையுலகில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
???? pic.twitter.com/tinDb6BxcL
— Sanjay Dutt (@duttsanjay) August 11, 2020