சஞ்சய் இயக்கும் முதல் படத்தில் விஜய் ஹீரோ இல்ல, அப்ப யாரு ஹீரோ? எஸ்.ஏ.சி பகிர்ந்த தகவல்!
- IndiaGlitz, [Wednesday,October 05 2022]
தளபதி விஜய்யின் மகன் சஞ்சய் விரைவில் இயக்குனராக தமிழ்த் திரையுலகில் அறிமுகமாவார் என்று கூறப்படும் நிலையில் அவர் இயக்கும் முதல் படத்தில் தளபதி விஜய் ஹீரோவாக நடிப்பார் என்றுதான் அனைவரும் கூறிக் கொண்டிருக்கின்றனர். ஆனால் தன்னுடைய முதல் பட ஹீரோ விஜய் இல்லை என சஞ்சய் கூறியதாக அவருடைய தாத்தாவும் இயக்குனருமான எஸ்.ஏ. சந்திரசேகர் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.
தளபதி விஜய் மற்றும் சங்கீதா தம்பதியின் மகன் சஞ்சய் ஜேசன் கனடாவில் இயக்குனருக்கான படிப்பை முடித்து சென்னை திரும்பி உள்ளார் என்பதும் அவர் விரைவில் ஒரு திரைப்படத்தை இயக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் சஞ்சய் இயக்கும் முதல் படத்தில் விஜய் ஹீரோவாக நடிப்பார் அல்லது சிறப்பு தோற்றத்தில் நடிப்பார் என்று செய்திகள் வெளியாகின. இந்த நிலையில் எஸ்.ஏ. சந்திரசேகர் மற்றும் அவருடைய மனைவி ஷோபா ஆகியோர் அளித்த பேட்டியில், ‘நான் என் பேரன் சஞ்சயிடம், ‘உனக்கு என்ன! நீ இயக்கும் முதல் படத்தில் சூப்பர் ஸ்டாரான உன் அப்பாவே நடிப்பார், அவரை வைத்து படம் எடுத்தால் நீ நிச்சயம் வெற்றி பெற்று விடலாம் என்று கூறினேன்.
அதற்கு சஞ்சய், ‘என்னுடைய முதல் பட ஹீரோ அப்பா விஜய் அல்ல, விஜய் சேதுபதிதான் என்று கூறியதாகவும் அதுதான் என்னுடைய ரத்தம் என்றும் எஸ்.ஏ.சி . தெரிவித்துள்ளார் இந்த பேட்டியின் வீடியோ தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது.