ஒரே படத்தில் மனிஷா கொய்ராலா, அதிதிராவ் ஹைத்ரி, சோனாக்சி சின்ஹா.. செம வீடியோ..!
Send us your feedback to audioarticles@vaarta.com
பாலிவுட் திரை உலகின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் உருவாகியுள்ள ’ஹீரமாண்டி’ என்ற படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் வீடியோ வெளியாகி உள்ள நிலையில் அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
பாலிவுட்டில் சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற ’தேவதாஸ்’ ’மேரி ஹோம்’ ’கபார் இஸ் பேக்’ ’பாஜிராவ் மஸ்தானி’ ’பத்மாவதி’ உள்ளிட்ட படங்களை இயக்கியவர் சஞ்சய் லீலா பன்சாலி. இவரது இயக்கத்தில் உருவாகி இருக்கும் அடுத்த படம் ’ஹீரமாண்டி’.
சரித்திர கதையம்சம் கொண்ட இந்த காவியத் தொடரில் சோனாக்ஷி சின்ஹா, மனிஷா கொய்ராலா, அதிதி ராவ் ஹைதாரி, ரிச்சா சதா, ஷர்மின் சேகல் மற்றும் சஞ்சீதா ஷேக் ஆகியோர் நடித்துள்ளனர்.
1947 ஆம் ஆண்டுக்கு முன் இந்தியா - பாகிஸ்தான் பிரிவுக்கு முன்னர் நடந்த கதையம்சம் கொண்ட இந்த படம் மிகவும் பிரமாண்டமாக உருவாகி வருகிறது. இந்த படம் நெட்பிளிக்ஸ் நேரடியாக ரிலீஸ் ஆக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இது குறித்த வீடியோ வெளியாகி உள்ள நிலையில் அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
Another time, another era, another magical world created by Sanjay Leela Bhansali that we can’t wait to be a part of. Here is a glimpse into the beautiful world of #Heeramandi 💫
— Netflix India (@NetflixIndia) February 18, 2023
Coming soon! pic.twitter.com/tv729JHXOE
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com