'மீண்டும் சந்திப்போம்': சஞ்சய் தத்தை வழியனுப்பி வைத்த 'லியோ' படக்குழு..!

  • IndiaGlitz, [Friday,March 17 2023]

தளபதி விஜய் நடித்து வரும் ‘லியோ’ படத்தின் படப்பிடிப்பு கடந்த சில வாரங்களாக காஷ்மீரில் நடைபெற்று வரும் நிலையில் இந்த படப்பிடிப்பில் சமீபத்தில் பிரபல பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் கலந்து கொண்டார் என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் தற்போது சஞ்சய் தத் சம்பந்தப்பட்ட காட்சிகளின் படப்பிடிப்பு முடிவடைந்ததை அடுத்து அவரை படக்குழுவினர் வழி அனுப்பி வைத்த புகைப்படம் இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

தளபதி விஜய் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், அனிருத் இசையில் உருவாகி வரும் திரைப்படம் ‘லியோ’. இந்த படத்தின் படப்பிடிப்பில் சமீபத்தில் சஞ்சய்தத் இணைந்தார் என்பதும் அவர் இந்த படத்தில் மெயின் வில்லனாக நடித்து வருகிறார் என்றும் விஜய்-சஞ்சய்தத் ஆக்சன் காட்சிகள் படமாக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் சஞ்சய் தத் காஷ்மீர் படப்பிடிப்பை முடித்துவிட்டு கிளம்பிய நிலையில் அவரை படத்தின் தயாரிப்பாளர் லலித் மற்றும் விஜய்யின் மேனேஜர் வழியனுப்பி வைத்துள்ளனர். இது குறித்த டுவிட்டர் பதிவில் ’சஞ்சய் தத் அவர்களுடன் பணி புரிந்தது மிகவும் மகிழ்ச்சியான அனுபவம், மிகவும் எளிமையான இனிமையான மனிதர் என்றும் தெரிவித்துள்ளனர்.

மேலும் அடுத்த கட்டமாக சென்னை படப்பிடிப்பில் உங்களை சந்திக்கிறோம் என்றும் மீண்டும் சந்திப்போம் சார் என்றும் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த பதிவு தற்போது வைரல் ஆகி வருகிறது.

More News

'நீங்கள் வெர்ஜினா'? ரசிகர் கேட்ட கேள்விக்கு ஸ்ருதிஹாசனின் பதிலடி..!

நடிகை ஸ்ருதிஹாசனிடம் நீங்கள் வெர்ஜினா? என கேள்வி கேட்ட ரசிகருக்கு அவர் பதிலடி கொடுத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திருமணமாகி 27 வருடங்கள்.. கணவருடன் கமல்-ரஜினி பட நாயகியின் புகைப்படம்..!

கமல்ஹாசன், ரஜினிகாந்த் உள்பட பல பிரபலங்களுடன் நடித்த நடிகை ஒருவர் திருமணமாகி 27 வருடங்கள் ஆனதை அடுத்து தனது கணவருடன் இருக்கும் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ள நிலையில் அந்த புகைப்படம்

அதுக்குள்ளவா..? ஜெயம் ரவியின் 'அகிலன்' ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு..!

ஜெயம் ரவி நடித்த 'அகிலன்' திரைப்படம் மார்ச் 10ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான நிலையில் அதற்குள் இந்த திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்து அறிவிப்பு வெளிவந்துள்ளது ரசிகர்களுக்கு

சொந்த வீடு கட்டிய விஜய் டிவி பிரபலம்.. திருமண மண்டபம் போல் பிரமாண்டமான வீடு..!

விஜய் டிவி பிரபலம் ஒருவர் சொந்த வீடு கட்டி உள்ள நிலையில் இந்த வீட்டின் கிரகப்பிரவேசம் நிகழ்ச்சியின் புகைப்படங்களை வெளியிட்டுள்ள நிலையில் அந்த புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் ஆச்சரியம் அடைந்து

கணவரின் பிறந்த நாளில் ரொமான்ஸ் போட்டோஷூட்.. அஜித் நாயகியின் அழகிய புகைப்படங்கள்..!

 அஜித் படத்தில் நாயகியாக நடித்த நடிகை தனது கணவரின் பிறந்தநாளை அடுத்து எடுக்கப்பட்ட ரொமான்ஸ் போட்டோஷூட் புகைப்படங்களை பதிவு செய்துள்ள நிலையில் அந்த புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன