லோகேஷை தனது குடும்பத்தில் ஒருவராகவே ஏற்று கொண்ட சஞ்சய்தத்.. வைரலாகும் பிறந்த நாள் வாழ்த்து..!

  • IndiaGlitz, [Tuesday,March 14 2023]

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இன்று தனது பிறந்த நாளை கொண்டாடு வரும் நிலையில் தனது குடும்பத்தை ஒருவராகவே அவரை ஏற்றுக் கொண்டு நடிகர் சஞ்சய்தத் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

நடிகர் சஞ்சய்தத் சமூக வலைதளத்தில் ’என்னுடைய சகோதரர், மகன், என்னுடைய குடும்பத்தில் ஒருவரான லோகேஷ் கனகராஜுக்கு எனது பிறந்தநாள் வாழ்த்துக்கள். கடவுள் உங்களது வெற்றிக்காக துணை நிற்பார், நீங்கள் அமைதியுடனும், மகிழ்ச்சியுடனும், நல்ல உடல் நலத்துடன், நீண்ட காலம் வாழ எனது வாழ்த்துக்கள்’ என்று தெரிவித்துள்ளார். இந்த பதிவு தற்போது இணையதளங்களில் வைரலாக இருக்கிறது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் உருவாகி வரும் ’லியோ’ திரைப்படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் சஞ்சய்தத் நடித்து வருகிறார் என்பதும் சமீபத்தில் அவர் காஷ்மீர் படபிடிப்பில் இணைந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் சஞ்சய் தத்தின் கேரக்டர் மாஸ் ஆக மிரட்டும் வகையில் இருக்கும் என்று படக்குழுவினர்களிடம் இருந்து தகவல் கசிந்துள்ளது.