அஜித்தின் 'விவேகம்' படத்தை பாராட்டிய சஞ்சய்தத்

  • IndiaGlitz, [Monday,September 18 2017]

தல அஜித் நடித்த 'விவேகம்' திரைப்படம் எதிர்மறை விமர்சனங்களை அடித்து நொறுக்கி நல்ல வசூலை பெற்றது என்பது அறிந்ததே. இந்த நிலையில் இந்த படத்திற்கு ஏற்கனவே கோலிவுட் திரையுலக பிரபலங்கள் முதல் இந்திய பிரபலங்கள் வரை பாராட்டியுள்ளனர்.

இந்த நிலையில் கடந்த 35 ஆண்டுகளாக பாலிவுட் திரையுலகில் கொடிகட்டி பறக்கும் பிரபல நடிகர் சஞ்சய்தத் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் அஜித்தின் 'விவேகம்' படத்தை பாராட்டியுள்ளார். சமீபத்தில் 'விவேகம்' படத்தின் டிரைலரை பார்த்ததாகவும், இந்த படம் உருவான விதம் குறித்து தன்னால் நம்பவே முடியவில்லை என்றும் கூறினார்.

மேலும் தமிழ், தெலுங்கு திரையுலகினர்கள் சினிமா உருவாக்கும் விதம் குறித்து நாம் இன்னும் சிந்திக்கவே இல்லை என்றும் குறிப்பாக பாகுபலி 2' படத்தின் உருவாக்கம் மிக அருமை என்று கூறிய சஞ்சய்தத், இதுமாதிரியான திரைப்படங்கள் பாலிவுட்டிலும் உருவாக வேண்டும் என்று விருப்பம் தெரிவித்தார்.

More News

நடிகை மீனா: குழந்தை நட்சத்திரம் முதல் குடும்ப கேரக்டர் வரை....

நடிகை மீனா: குழந்தை நட்சத்திரம் முதல் குடும்ப கேரக்டர் வரை....

மகேஷ்பாபு - விஜய்சேதுபதி ரசிகர்களை மெர்சலாக்கும் விஜய்

இளையதளபதி விஜய் நடித்து வரும் 'மெர்சல்' படத்தின் படப்பிடிப்பு இன்னும் ஒருசில நாட்களில் முற்றிலும் முடிந்துவிடும் நிலையில் இந்த படத்தின் டீசர் இயக்குனர் அட்லியின் பிறந்த நாளான...

விஷால்-லிங்குசாமியின் 'சண்டக்கோழி 2' படப்பிடிப்பு எப்போது?

விஷால் நடிப்பில் மிஷ்கின் இயக்கிய 'துப்பறிவாளன்' திரைப்படம் கடந்த வியாழன் அன்று ரிலீஸ் ஆகி பெரும் வரவேற்பை பெற்றதோடு நல்ல வசூலையும் பெற்று வருகிறது...

பிறந்த நாள் வாழ்த்துக்கள் விக்னேஷ் சிவன்!

இயக்குனர்-பாடலாசிரியர் விக்னேஷ் சிவன் அவர்கள் இன்று தனது பிறந்த நாளை கொண்டாடி வரும் நிலையில் அவருக்கு மனமார்ந்த பிறந்த நாள் வாழ்த்துக்களை IndiaGlitz சார்பில் தெரிவித்து கொள்கிறோம்

தல தோனிக்கு உற்சாகத்தை கொடுத்த சென்னை ரசிகர்கள்

இந்திய அணியின் கேப்டன் பதவியில் இருந்து தல தோனி விலகியிருந்தாலும் சென்னை ரசிகரகளை பொருத்தவரையில் தோனி தான் கேப்டனாக இருக்கின்றார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியால் கிடைத்த பாசப்பிணைப்பு இது