ரஜினி நடிக்க விரும்பிய கேரக்டரில் சஞ்சய்தத்

  • IndiaGlitz, [Tuesday,December 05 2017]

பிரபல இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சித்தார்த், பாபிசிம்ஹா, லட்சுமிமேனன் நடிப்பில் உருவன திரைப்படம் ஜிகர்தண்டா. கடந்த 2014ஆம் ஆண்டு வெளிவந்து வெற்றி பெற்ற இந்த படத்தின் இந்தி ரீமேக் தற்போது உருவாகவுள்ளது.

பிரபல பாலிவுட் இயக்குனர் நிஷிகாந்த் கம்மத் இந்த படத்தை இயக்கவுள்ளார். இவர் ஏற்கவே த்ரிஷ்யம் இந்தி ரீமேக் படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தில் சித்தார்த் கேரக்டரில் ஃபர்கான் அக்தர், லட்சுமிமேனன் கேரக்டரில் தமன்னாவும் நடிக்கவுள்ளனர். மேலும் ரஜினியே நடிக்கவிரும்பிய, தேசிய விருது பெற்று கொடுத்த பாபிசிம்ஹாவின் கேரக்டரில் சஞ்சய்தத் நடிக்கவுள்ளார்.

பிரபல பாலிவுட் நடிகர் அஜய்தேவ்கான் தயாரிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு மிக விரைவில் தொடங்கவுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

More News

நடிகை அம்பிகாவின் கனவை நிறைவேற்றிய டிராபிக் ராமசாமி!

பிரபல சமூக சேவகர் டிராபிக் ராமசாமியின் வாழ்க்கை வரலாற்று படத்தில் இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகரன் நடித்து வருகிறார் என்பதும் இந்த படத்தை விஜய்விக்ரம் இயக்கி வருகிறார் என்பதும் தெரிந்ததே

இயலாமையை ஒப்புக்கொண்டு ராஜினாமா செய்யுங்கள்: விஷாலுக்கு சேரன் கடிதம்

நடிகர் விஷால் இன்று ஆர்.கே.நகர் தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட வேட்புமனுதாக்கல் செய்துள்ள நிலையில் விஷாலின் இந்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து

சிம்புவுக்கு ஆதரவு கொடுக்கும் அஜித் இயக்குனர்.

சமீபத்தில் சிம்பு நடித்த 'அன்பானவன் அசராதவன் அடங்காதவன்' படத்தின் இயக்குனர் ஆதிக் மற்றும் தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன், சிம்பு மீது பல்வேறு குற்றச்சாட்டுக்களை தெரிவித்தனர்.

விஷாலுக்கு எதிர்ப்பு தெரிவித்து சேரன் உள்ளிருப்பு போராட்டம்

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிடும் நடிகர் விஷால் இன்று மதியம் வேட்புமனு தாக்கல் செய்துவிட்டு பின்னர் உடனே பிரச்சாரத்தையும் ஆரம்பித்துவிட்டார்.

உடனே உறவினர்களுக்கு போன் செய்யுங்கள்: மோடியை கலங்க வைத்த ஹர்திக் பட்டேல் பேச்சு

குஜராத் மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல் வரும் 9 மற்றும் 14 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது. பிரதமர் மோடியின் சொந்த மாநிலம் என்பதால் இந்த மாநிலத்தில் ஆட்சியை தக்க வைக்க வேண்டிய நிர்ப்பந்தம் பாஜகவுக்கு உள்ளது