விஜய்க்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சஞ்சய் தத்.. என்ன சொல்லியிருக்கார் பாருங்க..!
Send us your feedback to audioarticles@vaarta.com
தளபதி விஜய் இன்று தனது 49 வது பிறந்தநாளை கொண்டாடி வரும் நிலையில் அவருக்கு ஒட்டுமொத்த திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். மேலும் இன்று அதிகாலை 12 மணிக்கு அவர் நடித்து வரும் ’லியோ’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி இணையத்தை ஸ்தம்பிக்க வைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் விஜய் நடித்து வரும் ’லியோ’ திரைப்படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்து வரும் பிரபல பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் தனது சமூக வலைத்தளத்தில் விஜய்க்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
அதில் ’சகோதரர் விஜய் அவர்களுக்கு எனது இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். ’லியோ’ படத்தின் வெளியீட்டை நான் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறேன். இந்த ஆண்டு உங்களுக்கு வெற்றியும் மகிழ்ச்சியும் நிறைந்த ஆண்டாக அமைய எனது வாழ்த்துக்கள்’ என்று தெரிவித்துள்ளார்.
நடிகர் சஞ்சய் தத்தின் இந்த பிறந்தநாள் வாழ்த்து ட்விட்டை விஜய் ரசிகர்கள் வைரல் ஆக்கி வருகின்றனர்.
Wishing a very happy birthday to brother @actorvijay! Looking forward to Leo's release, wishing you a year filled with success and happiness! pic.twitter.com/ENb1AoJL0P
— Sanjay Dutt (@duttsanjay) June 22, 2023
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com