தனுஷின் 'சுருளி' படத்தில் இணைந்த பிரபல நடிகை
Send us your feedback to audioarticles@vaarta.com
தனுஷ் நடிப்பில் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் ’சுருளி’ படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் லண்டனில் முடிந்தது. இதனையடுத்து சென்னை திரும்பிய படக்குழுவினர் தற்போது அடுத்த கட்ட படப்பிடிப்பை நடத்தி வருகின்றனர்
மதுரை பின்னணியில் நடைபெற்று வரும் இந்த படப்பிடிப்பில் தனுஷின் ஃப்ளாஷ்பேக் காட்சிகள் படமாக்கப்பட்டு வருவதாகவும், அதற்காகவே அவர் முறுக்கு மீசை கெட்டப்பில் இருப்பதாகவும் கூறப்படுகிறது
இந்த நிலையில் தனுஷின் பிளாஷ்பேக் காட்சிகளில் நடிக்க பிரபல நடிகை சஞ்சனா நடராஜன் ஒப்பந்தம் செய்யப்பட்டு அவர் படப்பிடிப்பிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் ஏற்கனவே ’நோட்டா’ மற்றும் ‘கேம் ஓவர்’ உட்பட ஒரு சில படங்களில் நடித்தவர் என்பதும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் ஏற்கனவே ஐஸ்வர்யா லட்சுமி நாயகியாக நடித்து வருவது குறித்த செய்தியை ஏற்கனவே பார்த்தோம்
மேலும் இந்த படப்பிடிப்பில் பாபா பாஸ்கர், சௌந்தர்ராஜன் மற்றும் ராமச்சந்திரன் ஆகியோரும் தனுஷின் நெருக்கமான நண்பர்களாக நடித்து வருகின்றனர். தனுஷின் திருமணக் காட்சிகள் தற்போது படமாக்கப்பட்டு வருவதாகவும் இந்த திருமணத்தின் வாழ்த்து போஸ்டர்கள் குறித்த புகைப்படங்கள் தற்போது இணையதளங்களில் வலம் வந்து கொண்டிருக்கின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது
சந்தோஷ் நாராயணன் இசையில் உருவாகி வரும் இந்தப் படத்தை ஸ்டுடியோ நிறுவனம் தயாரித்து வருகிறது இந்தப் படம் அடுத்த ஆண்டு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments