தனுஷின் 'சுருளி' படத்தில் இணைந்த பிரபல நடிகை

  • IndiaGlitz, [Wednesday,December 18 2019]

தனுஷ் நடிப்பில் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் ’சுருளி’ படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் லண்டனில் முடிந்தது. இதனையடுத்து சென்னை திரும்பிய படக்குழுவினர் தற்போது அடுத்த கட்ட படப்பிடிப்பை நடத்தி வருகின்றனர்

மதுரை பின்னணியில் நடைபெற்று வரும் இந்த படப்பிடிப்பில் தனுஷின் ஃப்ளாஷ்பேக் காட்சிகள் படமாக்கப்பட்டு வருவதாகவும், அதற்காகவே அவர் முறுக்கு மீசை கெட்டப்பில் இருப்பதாகவும் கூறப்படுகிறது

இந்த நிலையில் தனுஷின் பிளாஷ்பேக் காட்சிகளில் நடிக்க பிரபல நடிகை சஞ்சனா நடராஜன் ஒப்பந்தம் செய்யப்பட்டு அவர் படப்பிடிப்பிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் ஏற்கனவே ’நோட்டா’ மற்றும் ‘கேம் ஓவர்’ உட்பட ஒரு சில படங்களில் நடித்தவர் என்பதும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் ஏற்கனவே ஐஸ்வர்யா லட்சுமி நாயகியாக நடித்து வருவது குறித்த செய்தியை ஏற்கனவே பார்த்தோம்

மேலும் இந்த படப்பிடிப்பில் பாபா பாஸ்கர், சௌந்தர்ராஜன் மற்றும் ராமச்சந்திரன் ஆகியோரும் தனுஷின் நெருக்கமான நண்பர்களாக நடித்து வருகின்றனர். தனுஷின் திருமணக் காட்சிகள் தற்போது படமாக்கப்பட்டு வருவதாகவும் இந்த திருமணத்தின் வாழ்த்து போஸ்டர்கள் குறித்த புகைப்படங்கள் தற்போது இணையதளங்களில் வலம் வந்து கொண்டிருக்கின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது

சந்தோஷ் நாராயணன் இசையில் உருவாகி வரும் இந்தப் படத்தை ஸ்டுடியோ நிறுவனம் தயாரித்து வருகிறது இந்தப் படம் அடுத்த ஆண்டு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது

More News

இப்போதைக்கு இவ்வளவுதான் சொல்ல முடியும்: 'தளபதி 64' நடிகரின் பரபரப்பு டுவீட்

தளபதி விஜய் நடித்து வரும் 'தளபதி 64' படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு தற்போது கர்நாடக மாநிலத்தில் உள்ள ஷிமோகா சிறைச்சாலையில் நடைபெற்று வருவது தெரிந்ததே.

அஜித்தின் 'வலிமை': முதல் நாளே ஆரம்பித்த ஆக்சன்!

அஜித் நடிப்பில் எச் வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் உருவாகவிருக்கும் 'வலிமை' திரைப்படத்தின் அறிவிப்பு கடந்த சில மாதங்களுக்கு முன்னரே

'தர்பார்' படத்தையும் கைப்பற்றிய சன் டிவி

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 166வது படமான 'பேட்ட' திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்தது என்பதும், இதனை அடுத்து ரஜினி நடிக்க உள்ள 'தலைவர் 168' என்ற படத்தையும்

பா.ரஞ்சித்தின் அடுத்த படம் குறித்த முக்கிய தகவல்

'அட்டகத்தி' என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமான இயக்குனர் பா ரஞ்சித் அவர்கள், அதன் பின்னர் 'மெட்ராஸ்' என்ற சூப்பர்ஹிட் படத்தை இயக்கினார்.

அஜித் ரசிகர்கள் வேற லெவல்! இலங்கை சென்ற பிரபல நடிகை ஆச்சரியம் 

அஜித் ரசிகர்கள் அஜித்தின் செய்தி எதுவாக இருந்தாலும் அதனை இந்திய அளவில், உலக அளவில் டிரெண்டுக்கு கொண்டு வருவார்கள் என்பது தெரிந்ததே.