சானியா மிர்சாவின் முன்னாள் கணவர் மறுமணம்.. மணப்பெண் ஒரு பிரபல நடிகையா?
Send us your feedback to audioarticles@vaarta.com
இந்தியாவின் பிரபல டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவின் முன்னாள் கணவர் மற்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சோயிப் மாலிக் பிரபல நடிகையை திருமணம் செய்து கொண்ட புகைப்படத்தை பதிவு செய்துள்ளார்.
சானியா மிர்சா மற்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சோயிப் மாலிக் ஆகிய இருவரும் காதலித்து 2010 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். இந்த தம்பதிக்கு ஐந்து வயதில் ஒரு மகன் உள்ளார்.
இந்த நிலையில் இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து விட்டதாக கூறப்பட்டது. இருப்பினும் இருவரும் விவாகரத்து பெற்றதாக அதிகாரபூர்வமான அறிவிப்பு வெளியாகவில்லை. இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னால் சானியா மிர்சா தனது சமூக வலைத்தளத்தில் ’திருமணம் கடினமானது, விவாகரத்து கடினமானது, இதில் உங்களுக்கான கடினமானதை தேர்வு செய்யுங்கள், உடல் பருமனாக இருப்பது கடினமானது, உடலை சரியாக வைத்திருப்பது கடினமானது, இதில் உங்களுக்கான கடினமானதை தேர்வு செய்யுங்கள்’ என்று தெரிவித்திருந்தார். இந்த பதிவு அவர் தனது கணவரை விவாகரத்து செய்ததை மறைமுகமாக தெரிவித்ததாக கூறப்பட்டது.
இந்த நிலையில் சோயிப் மாலிக், பிரபல பாகிஸ்தான் நடிகை சனா ஜாவித் என்பவரை திருமணம் செய்து கொண்டதாக இன்று அறிவித்துள்ளார். திருமணம் குறித்த புகைப்படங்களையும் அவர் தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ள நிலையில் சானியா மிர்சா - சோயிப் மாலிக் விவாகரத்து உறுதி செய்யப்பட்டுள்ளது.
மணப்பெண் சனா ஜாவித், ஏற்கனவே கடந்த 2020 ஆம் ஆண்டு பாகிஸ்தான் பாடகர் ஒருவரை திருமணம் செய்திருந்தார் என்றும் அவரை சமீபத்தில் விவாகரத்து செய்து விட்டதாக கூறப்படுகிறது . இந்த நிலையில் சோயிப் மாலிக் மற்றும் சனா ஜாவித் ஆகிய இருவரும் தங்களது சமூக வலைதளங்களில் திருமண புகைப்படத்தை பகிர்ந்து உள்ளதை அடுத்து ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments