துப்புரவு பணியாளர்களுக்கு பாதபூஜை: காலில் விழுந்து கும்பிட்ட பொதுமக்கள்
- IndiaGlitz, [Thursday,April 09 2020]
துப்புரவு பணியாளர்கள் என்றாலே இளக்காரமாக பார்த்த பலர் தற்போது கொரோனா வைரஸ் பாதிப்பின் போது அவர்கள் செய்யும் தன்னலம் கருதாத, தியாக மனப்பான்மையுடன் கூடிய பணியை பார்த்து அனைவரும் அவர்களுக்கு தகுந்த மரியாதை அளித்து வருகின்றனர்
ஏற்கனவே துப்புரவு பணியாளர்களுக்கு பல்வேறு தரப்பினர் மாலை அணிவித்து மரியாதை செய்தது உள்பட பல சம்பவங்களை நாம் பார்த்தோம். தற்போது அதன் உச்சகட்டமாக துப்புரவு பணியாளர்களுக்கு பாத பூஜை செய்து அவர்களுடைய காலில் விழுந்து கும்பிட்டு விருந்து வைத்த சம்பவம் ஒன்று அனைவரையும் நெகழ்ச்சி அடையச் செய்துள்ளது
ஈரோடு மாவட்டம் வெள்ளரிப்பட்டி என்ற பகுதியில் மண்டல அதிகாரியாக பணிபுரிந்து வரும் காளியம்மாள் என்பவர் அந்த பகுதியில் துப்புரவு பணியாளர்களாக பணிபுரிபவரகளை அழைத்து அவர்களுடைய கால்களுக்கு மஞ்சள் வேப்பிலை தண்ணீர் ஊற்றி பாதபூஜை செய்தார். மேலும் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் துப்புரவு பணியாளர்களின் காலில் விழுந்து கும்பிட்டனர். அதுமட்டுமின்றி கொரோனா பரவுவதை தடுக்க முக்கிய பங்காற்றி வரும் துப்புரவு பணியாளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையிலும் அறுசுவை விருந்து வைத்துள்ளார். இதுகுறித்த வீடியோக்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
துப்புரவு பணியாளர்களுக்கு பாதபூஜை செய்து விருந்து வைத்த குடும்பத்தினர்..! #Erode #CoronaVirus #Covid19 pic.twitter.com/SFoeQRKiHM
— Polimer News (@polimernews) April 9, 2020