கிரிக்கெட் வீரரின் குடும்பத்திற்கு மருமகளாகும் சானியா மிர்சாவின் தங்கை?
- IndiaGlitz, [Thursday,March 07 2019]
பிரபல இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா, பாகிஸ்தானின் பிரபல கிரிக்கெட் வீரர் சோயிப் மாலிக்கை கடந்த 2010ஆம் ஆண்டு திருமணம் செய்தார் என்பதும் இந்த தம்பதிக்கு ஒரு குழந்தை உள்ளது என்பதும் பலர் அறிந்ததே.
இந்த நிலையில் சானியாவின் தங்கை அனம் மிர்சாவும் ஒரு முன்னாள் கிரிக்கெட் வீர்ரின் வீட்டிற்கு மருமகளாக போவதாக செய்திகள் வெளிவந்துள்ளது. ஆம், முன்னாள் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் அசாருதீனின் மகன் ஆசாத்தை, அனம் மிர்சா காதலித்து வருவதாகவும், இருவரும் விரைவில் திருமணம் செய்யவிருப்பதாகவும் செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றது.
அனம் மிர்சா பேஷன் டிசைனராகவும், ஆசாத் வழக்கறிஞராகவும் உள்ளனர். இருவரும் சமீபத்தில் துபாயில் திருமணத்திற்காக சில பொருட்களை பர்சேஸ் செய்ததாக சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளனர். விரைவில் இரு குடும்பத்தினர்களும் இந்த திருமணம் குறித்து அதிகாரபூர்வ செய்தியை வெளியிடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.