ஊரடங்கால் பாதித்த மக்களுக்கு ரூ.1.25 கோடி செலவு செய்த சானியா மிர்சா
Send us your feedback to audioarticles@vaarta.com
இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வருவதை அடுத்து கொரோனா வைரஸ் தடுப்பு நிதியாக கோடிக்கணக்கான ரூபாய்களை தொழிலதிபர்களும், திரையுலக பிரபலங்களும் அளித்து வருகின்றனர். அதேபோல் விளையாட்டு துறையில் இருந்தும் கொரோனா வைரஸுக்கு எதிரான தடுப்பு நடவடிக்கைகளுக்கு நிதி குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
சச்சின் டெண்டுல்கர் 25 லட்சமும், சுரேஷ் ரெய்னா 52 லட்சமும், பிசிசிஐ 51 கோடியும் கொடுத்து உள்ளன என்பதும் தெரிந்ததே. இந்த நிலையில் பிரபல டென்னிஸ் வீராங்கனையான சானியா மிர்சா தனது அமைப்பின் மூலம் ரூ.1.25 கோடி ஊரடங்கு உத்தரவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு செலவு செய்துள்ளதாக அறிவித்துள்ளார்.
கடந்த வாரம் மட்டும் ஊரடங்கு உத்தரவு காரணமாக ஆயிரக்கணக்கான மக்கள் உணவு இல்லாமல் தவித்த நிலையில் ஆயிரக்கணக்கான மக்களுக்கு உணவு ஏற்பாடு செய்ததாகவும், இதுவரை சுமார் ஒரு லட்சம் பேர்களுக்கு உணவு ஏற்பாடு செய்ததன் மூலம் தங்கள் அமைப்பு ரூ.1.25 கோடி செலவு செய்து இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். சானியா மிர்சாவின் இந்த உதவிக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
The last week we have tried as a team to provide some help to the people in need..we provided food to thousands of families and raised 1.25 Crore in one week which will help close to 1 Lakh people.its an ongoing effort and we are in this together ????@youthfeedindia @safaindia pic.twitter.com/WEtl1ebjVR
— Sania Mirza (@MirzaSania) March 30, 2020
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout