'மாவீரன்' பாசிட்டிவ் விமர்சனம்: சிவகார்த்திகேயன் மனைவிக்கு வாழ்த்து தெரிவித்த சங்கீதா விஜய்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
சிவகார்த்திகேயன் நடித்த ’மாவீரன்’ திரைப்படம் இன்று வெளியாகி உள்ள நிலையில் முதல் நாள் முதல் காட்சி முடிந்த உடனே இந்த படத்திற்கு பாசிட்டிவ் விமர்சனங்கள் குவிந்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த படத்தை பார்த்த ரசிகர்கள், யூடியூப் விமர்சகர்கள் படத்திற்கு ஆதரவாக பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வரும் நிலையில் இந்த படம் நிச்சயம் சிவகார்த்திகேயனின் வெற்றி பெற பட்டியலில் இணையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் இன்றைய முதல் நாள் முதல் காட்சியில் பல திரையுலக பிரபலங்கள் ’மாவீரன்’ படத்தை பார்க்க வந்தனர் என்பதை பார்த்தோம். குறிப்பாக தளபதி விஜய்யின் மனைவி சங்கீதா, ’மாவீரன்’ படத்தை பார்க்க வந்த வீடியோ இணையத்தில் வைரலானது.
இந்த நிலையில் முதல் நாள் முதல் காட்சியின் போது சங்கீதா விஜய், தியேட்டரில் சிவகார்த்திகேயன் மனைவி ஆர்த்தியுடன் பேசிக் கொண்டிருக்கும் வீடியோ வைரல் ஆகி வருகிறது. இந்த உரையாடலின் போது அவர் சிவகார்த்திகேயனுக்கு வாழ்த்து தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Megha
Contact at support@indiaglitz.com
Comments