ஷங்கர் மகள் திருமணத்தில் சங்கீதா விஜய்.. வதந்திகளுக்கு முற்றுப்புள்ளியா?
- IndiaGlitz, [Tuesday,April 16 2024]
இயக்குனர் ஷங்கர் மகள் ஐஸ்வர்யா திருமணம் நேற்று நடைபெற்ற நிலையில் இந்த திருமணத்திற்கு தமிழக முதல்வர் மு க ஸ்டாலின், உலகநாயகன் கமல்ஹாசன், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், சூர்யா, விக்ரம், மணிரத்னம்,சுஹாசினி உள்ளிட்ட பலர் வருகை தந்தனர் என்பதும், இது குறித்த புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வந்தது என்பது தெரிந்தது.
இந்த நிலையில் தற்போது விஜய் ’கோட்’ படத்தின் படப்பிடிப்புக்காக ரஷ்யாவில் இருப்பதால் அவரால் இந்த திருமணத்தில் கலந்து கொள்ள முடியவில்லை. இந்நிலையில் விஜய்யின் சார்பில் அவரது மனைவி சங்கீதா விஜய் இந்த திருமணத்தில் கலந்து கொண்டுள்ளார் .
கடந்த சில மாதங்களாகவே விஜய் மற்றும் சங்கீதா ஆகிய இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து இருப்பதாக வதந்திகள் சமூக வலைதளத்தில் பதிவான நிலையில் அந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் தற்போது விஜய் சார்பில் சங்கீதா விஜய் கலந்து கொண்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
சங்கீதா விஜய் தனது தோழிகளுடன் இந்த திருமணத்தில் கலந்து கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன.