சங்கீதா-க்ரிஷ் தம்பதிக்கு இவ்வளவு பெரிய மகளா? ஆச்சரியத்தில் ரசிகர்கள்!
Send us your feedback to audioarticles@vaarta.com
தமிழ் திரையுலகின் நடிகைகளில் ஒருவரான சங்கீதா கடந்த 1997ஆம் ஆண்டு முதல் நடித்து வந்தாலும் 2003ஆம் ஆண்டு வெளியான பாலாவின் ’பிதாமகன்’ தான் அவருக்கு திருப்புமுனையை கொடுத்தது. அந்த படத்திற்காக அவருக்கு சிறந்த துணை நடிகைக்கான பிலிம்பேர் விருதும் தமிழக அரசின் சிறந்த துணை நடிகைக்கான விருதும் கிடைத்தது.
இதன் பின்னர் அவர் ’உயிர்’ ’தனம்’ உள்பட பல திரைப்படங்களில் முக்கிய கேரக்டரில் நடித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் கடந்த 2009ஆம் ஆண்டு பின்னணி பாடகர் க்ரிஷ் என்பவரை திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயிலில் சங்கீதா திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு மூன்று ஆண்டுகள் கழித்து 2012ஆம் ஆண்டு பெண் குழந்தை பிறந்தது என்பதும் அந்த குழந்தைக்கு ‘ஷிவ்யா’ என்று பெயர் வைத்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
சங்கீதா மற்றும் க்ரிஷ் ஆகிய இருவரும் தங்களது சமூக வலைதளங்களில் அவ்வப்போது ஷிவ்யாவின் புகைப்படங்களை வெளியிட்டு வந்தாலும், கடந்த சில வாரங்களுக்கு முன்னர் ஷிவ்யாவின் புகைப்படத்தை சங்கீதா தனது இன்ஸ்டாகிரமைல் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் சங்கீதாவுக்கு இவ்வளவு பெரிய மகளா? என ஆச்சரியத்தில் உள்ளனர். இந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout