தீபாவளி ரிலீஸ் பட்டியலில் இணைந்த விஜய்சேதுபதி படம்

  • IndiaGlitz, [Sunday,August 25 2019]

விஜய் நடித்த 'பிகில்' திரைப்படம் வரும் தீபாவளி அன்று வெளியாக உள்ள நிலையில் இந்த படத்துடன் ஒரு சில திரைப்படங்கள் வெளியாக வாய்ப்பு இருப்பதாக ஏற்கனவே பார்த்தோம்.

இந்த நிலையில் தீபாவளி தினத்தில் கார்த்தியின் 'கைதி' மற்றும் தனுஷின் 'பட்டாஸ்' உள்பட ஒருசில படங்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது விஜய்சேதுபதியின் 'சங்கத்தமிழன்' திரைப்படம் தீபாவளி ரிலீஸ் என அறிவிக்கப்பட்டுள்ளது .

விஜய்சேதுபதி நடித்த 'சங்கத்தமிழன்' திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், இந்த படத்தில் இடம்பெற்ற 'கமலா' என்ற பாடல் இன்று வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

இதனை அடுத்து சற்றுமுன் இந்த படத்தின் புதிய போஸ்டர் ஒன்று வெளியாகியுள்ளது. இந்த போஸ்டரின் மூலம் 'சங்கத்தமிழன்' திரைப்படம் தீபாவளி அன்று வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் விஜய்சேதுபதி ரசிகர்கள் உற்சாகமாக உள்ளனர்.

இந்த ஆண்டு தீபாவளி தினத்தில் 'பிகில்', 'சங்கத்தமிழன்' ஆகிய இரு படங்களும் வெளியாவது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்ட நிலையில், தனுஷின் 'பட்டாஸ்' கார்த்தியின் 'கைதி' ஆகிய திரைப்படங்களின் ரிலீஸ் குறித்த தகவலை அறிவித்தால் தீபாவளி தினத்தில் ரசிகர்களுக்கு நான்கு பிரபல நடிகர்களின் விருந்து காத்திருக்கிறது என்பதை உறுதி செய்ய முடியும்.