close
Choose your channels

தீபாவளி ரேஸில் இருந்து விலகியது 'சங்கத்தமிழன்'!

Friday, October 11, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தீபாவளி தினத்தில் விஜய் நடித்த ’பிகில், கார்த்தி நடித்த ’கைதி மற்றும் விஜய் சேதுபதியின் ’சங்கத்தமிழன்’ ஆகிய மூன்று திரைப்படங்கள் வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதனை அடுத்து மூன்று படங்களின் புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்ற நிலையில் தற்போது திடீரென விஜய்சேதுபதியின் ’சங்கத்தமிழன்’ திரைப்படம் தீபாவளி ரேஸில் இருந்து விலகியுள்ளது.

விஜய்சேதுபதியின் ’சங்கத்தமிழன்’ திரைப்படம் வரும் நவம்பர் 8 அல்லது 15 ஆகிய தேதிகளில் ஒன்றில் வெளியாகும் என்று தயாரிப்பு தரப்பில் இருந்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து வரும் தீபாவளியன்று விஜயின் ’பிகில்’ மற்றும் கார்த்தியின் ‘கைதி’ ஆகிய இரண்டு திரைப்படங்கள் மட்டுமே வெளியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தின் பெரும்பாலான திரையரங்குகளில் தீபாவளி தினத்தில் பிகில் படம் திரையிட புக் ஆகி இருப்பதாக தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றது. மொத்தமுள்ள சுமார் 1000 திரையரங்குகளிலும் சுமார் 700 முதல் இடம் 750 திரையரங்குகளில் ’பிகில்’ திரைப்படம் திரையிடப்படும் என்றும் ’கைதி திரைப்படம் 200 முதல் 250 திரையரங்குகளில் வெளியாகும் என்றும் கோலிவுட் வட்டாரங்கள் கூறுகின்றன.

இருப்பினும் இந்த இரு படங்களின் ரிலீஸ் தேதி அதிகாரரபூர்வமாக அறிவித்த பின்னரே திரையரங்குகளின் எண்ணிக்கை குறித்த சரியான விபரங்கள் தெரியும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஆண்டு தீபாவளி ஞாயிற்றுக்கிழமை வருவதால் அதற்கு முந்தைய வெள்ளிக்கிழமை ரிலீஸ் ஆகுமா? அல்லது தீபாவளி அன்று ரிலீஸ் ஆகுமா? என்பது இனிவரும் அறிவிப்பை பொருத்து தான் தெரியவரும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment