மீண்டும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கவின்!
Send us your feedback to audioarticles@vaarta.com
பிக்பாஸ் வீட்டில் இருந்து ரூபாய் ஐந்து லட்சத்தை பெற்றுக்கொண்டு சமீபத்தில் வெளியேறிய கவின், முதல் வேலையாக தனது தாயாரை சிறையிலிருந்து ஜாமீனில் வெளியே எடுத்துள்ளார் என்ற செய்தியை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் தற்போது இன்று மீண்டும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கவின் இணைந்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.
ஒவ்வொரு வாரமும் ஞாயிறு அன்று ஒரு போட்டியாளர் வெளியேறும்போது கமல்ஹாசனுடன் பேசுவது வழக்கமான ஒன்றாகும். ஆனால் இந்த வாரம் கவின் முன்கூட்டியே வெளியேறிவிட்டதால் கமலுடன் பேசும் சந்தர்ப்பம் இல்லாமல் போனது. எனவே இன்று அவர் பிக்பாஸ் மேடையில் தோன்றி கமலஹாசனுடன் பேசும் காட்சி ஒளிபரப்பாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் முகினை மற்ற நால்வரும் எவிக்சன் பட்டியலில் உள்ள நிலையில், இன்று முதல் நபராக சாண்டி காப்பாற்றப்படுகிறார். கவின் வீட்டை விட்டு வெளியேற முடிவு செய்தபோது அதிர்ச்சிக்குள்ளாக்கிய சாண்டி, கவினின் மனதை மாற்ற பெரும் முயற்சி செய்தார். அது முடியாமல் போனதும் கவினுக்கு கண்ணீருடன் விடை கொடுத்தார் சாண்டி. இது கவினின் ஆதரவாளர்களை நெகிழ வைத்ததோடு, கவினுக்கு போட வேண்டிய ஓட்டுக்களை சாண்டிக்கு போட்டிருப்பதால் சாண்டி முதல் நபராக காப்பாற்றப்பட்டிருக்கலாம் என கருதப்படுகிறது.
இந்த நிலையில் மீதி உள்ள லாஸ்லியா, ஷெரின் மற்றும் தர்ஷன் ஆகிய மூவரில் யார் இந்த வாரம் வெளியேறுவார்கள் என்பதை சற்று பொறுத்திருந்து பார்ப்போம்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com