கிரிக்கெட் வீரர்களுடன் சாண்டி மாஸ்டர் டான்ஸ்: வைரல் வீடியோ

  • IndiaGlitz, [Thursday,April 29 2021]

தற்போது ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் அடுத்த கட்டமாக டிஎன்பிஎல் கிரிக்கெட் போட்டிகள் நடைபெற இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள 8 அணிகள் மோதும் டிஎன்பிஎல் கிரிக்கெட் போட்டி ஜூன் 4-ஆம் தேதி தொடங்கும் என்றும் அந்த போட்டிகள் ஜூலை மாதம் 4-ஆம் தேதி முடிவடையும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த போட்டியின் அட்டவணை விரைவில் வெளியிடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் டிஎன்பிஎல் கிரிக்கெட் போட்டியில் கலந்து கொள்ளும் அணிகளில் ஒன்றான நெல்லை ராயல் கிங்ஸ் என்ற அணிக்காக புரமோஷன் பாடல் ஒன்று உருவாக்கப்பட்டு வருகிறது. சாண்டி மாஸ்டரின் நடன இயக்கத்தில் உருவாகும் இந்த பாடல் குறித்த வீடியோவை சாண்டி மாஸ்டர் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பதிவுசெய்துள்ளார்.

கிரிக்கெட் மைதானத்தில் நெல்லை ராயல் கிங்ஸ் வீரர்களுடன் சாண்டி நடனமாடும் வீடியோ தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த பாடல் விரைவில் வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.