கர்ப்பிணி மனைவிக்கு பிறந்த நாள் வாழ்த்து கூறிய சாண்டி: வைரல் புகைப்படம்!
Send us your feedback to audioarticles@vaarta.com
பிரபல டான்ஸ் மாஸ்டர் மற்றும் பிக்பாஸ் போட்டியாளர்களில் ஒருவரான சாண்டி மாஸ்டர் தனது மனைவியின் பிறந்தநாளை அடுத்து உருக்கமாக கவிதை ஒன்றை எழுதி தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார். மேலும் அவர் பதிவு செய்துள்ள புகைப்படத்தில் அவருடைய மனைவி கர்ப்பிணியாக இருப்பது போன்று உள்ளதை அடுத்து ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
பிரபல டான்ஸ் மாஸ்டர் சாண்டி மனைவி இன்று தனது பிறந்தநாளை கொண்டாடினார். அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கூறிய சாண்டி கவிதை வடிவில் கூறியதாவது:
எனக்காகவே வாழும் ஒரு உயிர்
என்னோட வெற்றிக்காகவே உழைக்கும் ஒரு உயிர்
உன்னாலே நான்
உனக்காகவே நான்
அன்பு அறியாத என் வாழ்வில் வந்த
வானவில் நீயடி கண்ணம்மா
என்று பதிவு செய்துள்ளார். மேலும் அவர் பதிவு செய்துள்ள புகைப்படத்தில் சாண்டியின் மனைவி கர்ப்பமாக இருப்பது போன்றும் அவரது வயிற்றை சாண்டியும் அவரது மகளும் முத்தமிடுவது போன்ற போன்ற புகைப்படம் தற்போது மிகப்பெரிய அளவில் வைரலாகி வருகிறது. மேலும் இரண்டாவது குழந்தையை வரவேற்க காத்திருக்கும் சாண்டி மாஸ்டருக்கு தங்களுடைய வாழ்த்துக்கள் என ரசிகர்கள் கமெண்ட்ஸ் பகுதியில் பதிவு செய்து வருகின்றனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout