சாண்டி மாஸ்டர் வீட்டில் நடந்த விசேஷம்: அம்மாவுக்கு நலங்கு வைத்த லாலா பாப்பா!

  • IndiaGlitz, [Wednesday,April 28 2021]

பிக்பாஸ் சீசன் 3 போட்டியாளர்களில் ஒருவர் சாண்டி மாஸ்டர் என்பதும் அவர் இறுதிப் போட்டி வரை சென்று ரன்னராக வெற்றி பெற்றார் என்பதும் தெரிந்தது. அது மட்டுமின்றி சாண்டி மாஸ்டர் பிக்பாஸ் வீட்டில் இருக்கும்போது கலகலப்பாக மற்ற போட்டியாளர்களை வைத்திருந்தார் என்பதும் அவரால் தான் அந்த நிகழ்ச்சியே ரசிக்கும் வகையில் இருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது

குறிப்பாக சாண்டியின் மனைவி மற்றும் லாலா பிக்பாஸ் வீட்டுக்குள் வந்தபோது ஒட்டுமொத்த பிக்பாஸ் போட்டியாளர்களும் லாலா பாப்பாவுடன் விளையாடினார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தற்போது சாண்டி மாஸ்டரின் மனைவி மீண்டும் கர்ப்பமாகி உள்ளார். அவருக்கு வளைகாப்பு நிகழ்ச்சி சமீபத்தில் மிகவும் எளிமையாக நடத்தப்பட்டது. சாண்டி மாஸ்டரின் குழந்தை லாலா பாப்பா தனது அம்மாவுக்கு நலங்கு வைத்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

சாண்டி மாஸ்டரின் மனைவிக்கு இரண்டாவது குழந்தை வரும் ஆகஸ்ட் மாதம் பிறக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதை அடுத்து அவருக்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்