என்னுடைய ராஜா இவர்தான்: மகனின் பெயரை அறிவித்த பிக்பாஸ் சாண்டி!

  • IndiaGlitz, [Friday,September 24 2021]

பிரபல நடன இயக்குனரும் பிக்பாஸ் போட்டியாளர்களில் ஒருவருமான சாண்டி மாஸ்டருக்கு ஏற்கனவே லாலா என்ற பெண் குழந்தை இருக்கும் நிலையில் தற்போது சமீபத்தில் அவருக்கு ஆண் குழந்தை ஒன்று பிறந்தது என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் தனது மகனின் புதிய புகைப்படத்தை வெளியிட்டதோடு தனது மகனின் பெயரையும் சாண்டி மாஸ்டர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

ஷான் மைக்கேல் என்ற பெயரை தனது மகனுக்கு சாண்டி மாஸ்ட்ர் தேர்வு செய்துள்ளார். மேலும் தனது மகனின் வித்தியாசமான புகைப்படங்களை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த புகைப்படங்களுக்கு லைக்ஸ்கள், கமெண்ட்ஸ்கள் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த புகைப்படங்களை சாண்டி மாஸ்டர் வெளியிட்ட ஒரு சில மணி நேரங்கள் மட்டுமே ஆகியுள்ள நிலையில் சுமார் 2 லட்சம் லைக்ஸ் கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சாண்டி மாஸ்டர் கதாநாயகனாக நடித்த 3:33 என்ற திரைப்படம் சமீபத்தில் சென்சார் ஆகியது என்றும் இந்த படத்துக்கு ’யுஏ’ சான்றிதழ் கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் ரிலீஸ் தேதி இன்னும் ஒரு சில நாட்களில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.