செலவு செய்த தொகை கிடைத்துவிட்டது: சமீபத்தில் வெளியான படத்தின் தயாரிப்பாளர் அறிவிப்பு!
Send us your feedback to audioarticles@vaarta.com
சமீபத்தில் வெளியான திரைப்படத்தின் தயாரிப்பு நிறுவனம் தாங்கள் செலவு செய்த தொகை கிடைத்துவிட்டதாகவும் அடுத்த படத்தின் அறிவிப்பு விரைவில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பிரபல டான்ஸ் மாஸ்டர் சாண்டி நடித்த திரைப்படம் ’3;33’. அதிரடி திகில் திரைப்படமான இந்த படம் டிசம்பர் 10ஆம் தேதி வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
எங்கள் நிறுவனம் தயாரித்த முதல் திரைப்படம் ’3;33’ கடந்த வாரம் வெளியாகி திரையரங்குகளில் ஓடிக்கொண்டு இருக்கின்றது. எங்கள் திரைப்படத்திற்கு நீங்கள் கொடுத்து வரும் ஆதரவிற்கு நாங்கள் அனைவரும் நன்றி சொல்ல கடமை பட்டிருக்கிறோம்.
ஊடக நண்பர்கள், பத்திரிகையாளர்கள், இந்த படத்தை திரை அரங்கிற்கு கொண்டு வந்த விநியோகஸ்தர்கள், திரையரங்கு உரிமையாளர்கள் மற்றும் எங்களுக்கு தொடர்ந்து ஆதரவு தந்து கொண்டிருக்கும் மக்களாகிய உங்கள் அனைவருக்கும் என் நன்றிகள்.
எங்களுக்கு குறைந்த திரையரங்குகளை கிடைத்திருந்தாலும் மக்களின் பேராதரவால் இந்த படத்தை திரைக்கு கொண்டு வந்ததற்கான தொகை முழுவதும் எங்களுக்கு திரும்ப கிடைத்து விட்டது என்பதை நாங்கள் மிக்க மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம். உங்களின் இந்த ஆதரவு எங்களை போல் உள்ள புதிய தயாரிப்பாளர்களுக்கு ஊக்கமளிக்கிறது. மீண்டும் எங்கள் நிறுவனம் தயாரிக்கும் அடுத்த படத்தின் அறிவிப்பை மிக விரைவில் வெளியிடுகிறோம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Thank you for all love & wonderful support showered on us. Our Next project will be Announced soon...???????????? pic.twitter.com/svr8Y9wuKX
— T. Jeevitha kishore (@ProducerJeevi) December 16, 2021
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout