சாண்டி டைவர்ஸ் செய்ய என்னோட டார்ச்சர்தான் காரணம்: காஜல்
Send us your feedback to audioarticles@vaarta.com
பிக்பாஸ் பங்கேற்பாளர்களில் ஒருவராகிய காஜல், பிரபல டான்ஸ் மாஸ்டர் சாண்டியின் முன்னாள் மனைவி என்பது அனைவரும் தெரிந்ததே. இவர்களது விவாகரத்துக்கு காரணம் என்ன என்பது குறித்து நமக்கு அளித்த பிரத்யேக பேட்டியில் காஜல் மனம் திறந்து கூறியுள்ளார்.
புதுப்புது அர்த்தங்கள் கீதா மாதிரி நான் தொடர்ந்து சாண்டிக்கு லவ் டார்ச்சர் கொடுத்ததே விவாகரத்துக்கு காரணம். எங்கள் இருவர் மீதும் தவறும் உள்ளது. நான் கொஞ்சம் டார்ச்சரை குறைத்திருக்கலாம், அல்லது லவ் டார்ச்சர் தானே என்றும் சாண்டியும் விட்டுக்கொடுத்திருக்கலாம், இருவர் மீது பாதிப்பாதி தவறு உள்ளது' என்று கூறினார்.
மேலும் சமூக வலைத்தளங்களில் இரண்டு குழந்தைகளுடன் காஜலை விட்டுவிட்டு போய்விட்டாரே சாண்டி என்று பலர் திட்டுகின்றனர். அது உண்மை அல்ல. என்னுடன் இருக்கும் இரண்டு குழந்தைகள் என்னுடைய அக்கா மற்றும் தம்பி பையன்கள். எனவே என்னை திட்டுவதை கூட நான் பொறுத்துக்கொள்வேன், என்னுடைய முன்னாள் கணவரை திட்டுவதை என்னால் தாங்கி கொள்ள முடியாது' என்று கூறினார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Contact at support@indiaglitz.com