மகள் பாசத்தால் அழுத சாண்டி: முன்னாள் மனைவியும் கண்ணீர்
Send us your feedback to audioarticles@vaarta.com
பிக்பாஸ் வீட்டில் எப்போதும் ஜாலியாக இருக்கும் ஒரே நபர் என்றால் அது நடன இயக்குனர் சாண்டிதான். இந்த நிலையில் நேற்று சாண்டியின் பிறந்த நாள் பிக்பாஸ் வீட்டில் கொண்டாடப்பட்டது. இதனை முன்னிட்டு சாண்டிக்கு அவரது மகள் படம் போட்ட தலையணை கொடுக்கப்பட்டதோடு அங்குள்ள டிவியில் சாண்டி குழந்தையின் வீடியோவும் ஒளிபரப்பப்பட்டது. இதனை பார்த்து சாண்டி உணர்ச்சிவசப்பட்டு அழுதார்.
மகளின் மீதுள்ள அதீத பாசத்தால் அழுத சாண்டியை பார்த்து லாஸ்லியா, உள்பட பிக்பாஸ் வீட்டில் உள்ள அனைவரும் அழுதனர். இதனால் நேற்று பிக்பாஸ் வீடு உணர்ச்சிமயமாக காணப்பட்டது
இந்த நிலையில் சாண்டியின் மகள் பாசத்தை தொலைக்காட்சியில் பார்த்த அவரது முன்னாள் மனைவியும் கடந்த பிக்பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவருமான காஜல் பசுபதி, சாண்டி அழும் காட்சியை தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்து கண்ணீர் வடிப்பது போன்ற இமோஜியையும் பதிவு செய்துள்ளார்.
— Kaajal Pasupathi (@kaajalActress) July 5, 2019
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments