கெளதம் மேனனின் அடுத்த படத்தின் சென்சார் தகவல்!

பிரபல இயக்குனர் கௌதம் மேனனின் அடுத்த திரைப்படத்தின் சென்சார் தகவல் சற்று முன் வெளியாகி உள்ளது.

பிரபல இயக்குநர் கவுதம் மேனன் இயக்கத்தில் ’ஜோஸ்வா இமைபோல் காக்க’, ‘துருவ நட்சத்திரம்’ மற்றும் ’வெந்து தணிந்தது காடு’ ஆகிய மூன்று திரைப்படங்கள் உருவாகி வருகிறது என்பதும் இந்த மூன்று திரைப்படங்களின் படப்பிடிப்புகளும் நிறைவடையும் தருவாயில் இருப்பதால் அடுத்தடுத்து ரிலீஸ் ஆக வாய்ப்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இயக்குனர் பணி மட்டுமின்றி ஒரு சில திரைப்படங்களில் கௌதம் மேனன் நடித்து வருகிறார் என்பது தெரிந்ததே. சமீபத்தில் வெளியான விஜய் ஆண்டனியின் ‘கோடியில் ஒருவன்’ என்ற திரைப்படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்துள்ள கௌதம் மேனன், வரும் அக்டோபர் 1ஆம் தேதி வெளியாக உள்ள ’ருத்ரதாண்டவம்’ என்ற திரைப்படத்திலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் கௌதம் மேனன் நடித்த திரைப்படங்களில் 3:33. நடன இயக்குனர் சாண்டி முக்கிய வேடத்தில் நடித்துள்ள இந்த திரைப்படத்தை நம்பிக்கை சந்துரு என்பவர் இயக்கியுள்ளார். இந்த படத்திற்கு சென்சார் அதிகாரிகள் ’யுஏ’ சான்றிதழ் அளித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து இந்த படத்தின் ரிலீஸ் தேதியை விரைவில் அறிவிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

More News

யக்கோவ், உன்னை நினைச்சு நான் பெருமைப்படுகிறேன்: கீர்த்தி பாண்டியன்

நடிகை கீர்த்தி பாண்டியன் தனது சகோதரி ரம்யா பாண்டியனை நினைத்து பெருமைப்படுவதாக சமூக வலைதளங்களில் பதிவு செய்துள்ளார். 

சிவகார்த்திகேயனின் 'டான்': அடுத்தகட்ட பணிகள் தொடக்கம்!

சிவகார்த்திகேயன் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் உருவான 'டாக்டர்' திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அக்டோபர் 1 என ஏற்கனவே அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப் பட்டுள்ளது என்பது தெரிந்ததே.

மேட்ச் ஃபிக்சிங்கிற்கு சிக்னலா? சோஷியல் மீடியாவில் போட்டோ போட்டு சிக்கிய இந்திய வீரர்!

ஐபிஎல் 14 ஆவது சீசன் போட்டிகளின் இரண்டாவது கட்டப் போட்டிகள் அனைத்தும் தற்போது ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது.

மூன்றரை கோடி ரூபாய் காருக்கு கூடுதலாக ரூ.17 லட்சம் செலவு செய்த பிரபல நடிகர்!

மூன்றரை கோடி ரூபாய்க்கு ஆடம்பர கார் வாங்கிய பிரபல நடிகர் ஒருவர் அந்த காருக்கு ஃபேன்சி நம்பர் வாங்க வேண்டும் என்பதற்காக கூடுதலாக 17 லட்ச ரூபாய் செலவு செய்த தகவல் தற்போது வெளிவந்துள்ளது.

திருப்பதி கோவிலில் ரஜினிகாந்த் மகள்கள்: வைரல் வீடியோ!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் இரண்டு மகள்களான ஐஸ்வர்யா மற்றும் சௌந்தர்யா ஆகியோர் திருப்பதி கோவிலில் சாமி தரிசனம் செய்த வீடியோ சற்றுமுன் இணையதளங்களில் வைரலாகி வருகிறது.