4- வது காதலனை ரூம்பில் பூட்டி சித்ரவதை செய்த ஏட்டு சந்தியா....! கண்ணீருடன் காவலில் புகாரளித்த கணவன்...!
Send us your feedback to audioarticles@vaarta.com
ஏட்டு சந்தியா ராணி தன்னுடைய 4-வது கணவரை அறையில் பூட்டி வைத்து, டார்ச்சர் செய்த சம்பவம் தெலுங்கானாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தெலுங்கானா மாநிலம் , ஐதராபாத்தில் ஆயுதப்படை பிரிவில் தலைமைக் காவல் அதிகாரியாக பணிபுரிந்து வருகிறார் சந்தியா ராணி. இவருக்கு ஏற்கனவே 3 முறை திருமணமான நிலையில், ஒரு பெண் குழந்தையும் உள்ளது.
இந்நிலையில் சந்தியாவின் நான்காவது கணவரான, சரண் தேஜ் என்பவர், சந்தியா தன்னை திருமணம் செய்துகொண்டு டார்ச்சர் செய்வதாக, ஹைதராபாத் நகர காவல்துறையினருக்கு வாட்ஸ் அப்-பில் புகார் அளித்துள்ளார். இது குறித்த செய்திகள் ஊடகங்களில் காட்டுத்தீ போல பரவியது. இதுகுறித்து காவல் துறை உயர் அதிகாரிகள், ரகசியமாக விசாரணை நடத்தி வந்தனர்.
அதில் சந்தியாவிடம் தீவிர விசாரணை நடத்தியதில் பல திடுக்கிடும் உண்மைகள் வெளிவந்துள்ளன. 4 ஆண்களை காதலித்து ஏமாற்றி திருமணம் செய்துள்ளார் ஏட்டு சந்தியா ராணி. முதல் 3 கணவர்களை விவாகரத்து செய்த நிலையில், ஐதராபாத்திற்கு வேலை காரணமாக வந்த சரண் தேஜ்-ஐயும் 4-வதாக காதலித்து கட்டாய திருமணம் செய்துள்ளார். இவருடைய 3-வது கணவர் குடும்ப பிரச்சனை காரணமாக தற்கொலை செய்துகொண்டதாகவும் விசாரணையில் கூறியுள்ளார்.
திருமணத்திற்கு பிறகு சந்தியா தனது மதத்திற்கு மாறவேண்டும் என்றும், தான் தேவாலயத்தில் பார்த்த வேலையைத்தான் பார்க்க வேண்டும் என்றும் சரண் தேஜ்-ஐ வற்புறுத்தியுள்ளார். இதன் பிறகு தான் சந்தியா 3 திருமணங்கள் செய்து தன்னை காதல் வலையில் வீழ்த்தியது சரண் தேஜ்-க்கு தெரியவந்துள்ளது. இதனால் சந்தியாவை விட்டு விலக நினைத்துள்ளார் சரண். ஆனால் உன்மேல் வழக்குபோட்டுவிடுவேன், என வீட்டில் பூட்டி சித்ரவதை செய்துள்ளார் சந்தியா. இதனால் காவல்துறை உயர் அதிகாரிகளுக்கு வாட்ஸ் அப் மூலம் கதறிய நிலையில் புகார் அளித்துள்ளார் சரண். இதைத்தொடர்ந்து காவல்துறையினர் சந்தியாவை விசாரித்தபின்புதான் திடுக்கிடும் உண்மைகள் வெளிவந்துள்ளது, இச்சம்பவம் தெலுங்கானாவில் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com