என்னிடமும் சிலர் தவறாக நடந்து கொண்டனர். பிரபல தமிழ் நடிகை

  • IndiaGlitz, [Sunday,February 26 2017]

நடிகை பாவனா சமீபத்தில் மர்ம கும்பல் ஒன்றினால் பாலியல் தொல்லைக்கு ஆளான சம்பவத்தின் அதிர்ச்சியில் இருந்தே இன்னும் திரையுலகம் மீண்டும் வரவில்லை. இந்த நிலையில் தன்னிடமும் ஒருசிலர் தவறாக நடந்து கொண்டதாக 'காதல்' படத்தின் மூலம் அறிமுகமான நடிகை சந்தியா தெரிவித்துள்ளார்.

நேற்று தி.நகரில் தனியார் நிறுவனம் ஒன்றின் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து நடிகை சந்தியா கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் அவர் பேசியபோது, 'பாவனா தனக்கு நெருக்கமான தோழி என்றும், அவருக்கு நடந்த சம்பவம் குறித்து இனி பேசி பயனில்லை என்றும் கூறினார். மேலும் இதுபோல், தன்னிடமும் சிலர் தவறாக நடக்க முயன்றதாகவும், கூட்டம் அதிகமான இடங்களாக இருந்ததனால் யார் என்று கண்டுகொள்ள முடியவில்லை என்றும், சந்தியா வேதனையுடன் தெரிவித்தார்.

தனக்கு நேர்ந்த துயரத்தை தைரியமாக பாவனா கூறியதால்தான், அந்த சம்பவத்தின் குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்பட்டு கைது செய்யப்பட்டதோடு, வேறு சில நடிகைகளும் தங்களுக்கு நேர்ந்த துயரமான அனுபவத்தை தற்போது தைரியமாக கூறி வருகின்றனர். நடந்த குற்றத்தை நாகரீகம் கருதி மூடி மூடி வைப்பதால்தான் அந்த குற்றம் மீண்டும் மீண்டும் தொடர்கிறது. இவ்வாறு தைரியமாக தங்களுக்கு நேர்ந்த சம்பவங்களை தைரியமாக வெளியே கூறுவதால் இதுபோன்ற குற்றங்கள் குறையும் என்பதே அனைவரின் கருத்தாக உள்ளது.

More News

மிக அதிக தொகைக்கு இன்சூர் செய்யப்பட்ட ரஜினி படம்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் இயக்கத்தில் ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் லைகாவின் மிக அதிகமான பொருட்செலவில் உருவாகி வரும் படம் எந்திரன் படத்தின் இரண்டாம் பாகமான '2.0'...

ரஜினி-லதா தம்பதிக்கு திருமண நாள் நல்வாழ்த்துக்கள்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களும் லதா அவர்களும் 36 வருடங்களுக்கு முன் அதாவது கடந்த 1981ஆம் ஆண்டு இல்வாழ்க்கையில் இணைந்த நாள் இன்று. சென்னை எத்திராஜ் கல்லூரியில் படித்து கொண்டிருந்த போது ஒரு ரசிகையாக கல்லூரி இதழ் ஒன்றுக்காக ரஜினியை பேட்டியெடுக்க சென்ற லதா, அவரிடம் மனதை பறிகொடுத்து பின்னர் வாழ்க்கையிலும் இணைந்த நாள் இன்று...

ஜெ.குறித்த சர்ச்சை கருத்து கூறியது ஏன்? கைதான ராமசீதா பரபரப்பு வாக்குமூலம்

முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து சமீபத்தில் ஒரு கூட்டத்தில் பேசிய ராமசீதா என்பவர் தன்னை அப்பல்லோ டாக்டர் என்று அறிமுகம் செய்து ஜெயலலிதாவை மருத்துவமனைக்கு கொண்டு வந்தபோதே பிணமாகத்தான் கொண்டு வந்தார்கள் என்றும், தான் அந்த மருத்துவமனையில் இருந்து ராஜினாமா செய்துவிட்டதாகவும் பரபரப்பு தகவலை கூறினார்...

ஜல்லிக்கட்டு, தமிழக அரசியலை அடுத்து கமலின் அடுத்த பார்வை

கடந்த சில மாதங்களாகவே கமல்ஹாசனின் சமூக வலைத்தள பக்கம் சூடான கருத்துக்களை தெரிவித்து வருகிறது. இதனால் அவருடைய பக்கத்தின் ஃபாலோயர்களின் எண்ணிக்கை எகிறி வருகிறது...

கருணாசுக்கு திருவாடனை தொகுதி மக்கள் தெரிவித்த எதிர்ப்பு.

முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசு, ஆட்சி பொறுப்பை ஏற்று நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றுள்ள போதிலும் மதில் மேல் பூனையாகத்தான் ஆட்சியின் நிலை உள்ளது. 118 எம்.எல்.ஏக்கள் ஆதரவு தேவை என்ற நிலையில் தற்போது 122 எம்.எல்.ஏக்கள் ஆதரவு அரசுக்கு உள்ளது. 5 எம்.எல்.ஏக்கள் தடம் மாறிவிட்டால் ஆட்சி அம்போதான்...