என்னிடமும் சிலர் தவறாக நடந்து கொண்டனர். பிரபல தமிழ் நடிகை
Send us your feedback to audioarticles@vaarta.com
நடிகை பாவனா சமீபத்தில் மர்ம கும்பல் ஒன்றினால் பாலியல் தொல்லைக்கு ஆளான சம்பவத்தின் அதிர்ச்சியில் இருந்தே இன்னும் திரையுலகம் மீண்டும் வரவில்லை. இந்த நிலையில் தன்னிடமும் ஒருசிலர் தவறாக நடந்து கொண்டதாக 'காதல்' படத்தின் மூலம் அறிமுகமான நடிகை சந்தியா தெரிவித்துள்ளார்.
நேற்று தி.நகரில் தனியார் நிறுவனம் ஒன்றின் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து நடிகை சந்தியா கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் அவர் பேசியபோது, 'பாவனா தனக்கு நெருக்கமான தோழி என்றும், அவருக்கு நடந்த சம்பவம் குறித்து இனி பேசி பயனில்லை என்றும் கூறினார். மேலும் இதுபோல், தன்னிடமும் சிலர் தவறாக நடக்க முயன்றதாகவும், கூட்டம் அதிகமான இடங்களாக இருந்ததனால் யார் என்று கண்டுகொள்ள முடியவில்லை என்றும், சந்தியா வேதனையுடன் தெரிவித்தார்.
தனக்கு நேர்ந்த துயரத்தை தைரியமாக பாவனா கூறியதால்தான், அந்த சம்பவத்தின் குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்பட்டு கைது செய்யப்பட்டதோடு, வேறு சில நடிகைகளும் தங்களுக்கு நேர்ந்த துயரமான அனுபவத்தை தற்போது தைரியமாக கூறி வருகின்றனர். நடந்த குற்றத்தை நாகரீகம் கருதி மூடி மூடி வைப்பதால்தான் அந்த குற்றம் மீண்டும் மீண்டும் தொடர்கிறது. இவ்வாறு தைரியமாக தங்களுக்கு நேர்ந்த சம்பவங்களை தைரியமாக வெளியே கூறுவதால் இதுபோன்ற குற்றங்கள் குறையும் என்பதே அனைவரின் கருத்தாக உள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Contact at support@indiaglitz.com