கேரளாவுக்காக மீனாட்சியம்மன் கோவிலில் வழிபாடு செய்த விஷால்

  • IndiaGlitz, [Saturday,August 18 2018]

கடவுளின் தேசம் என்று அழைக்கப்படும் கேரளாவில் கடந்த சில நாட்களாக பெய்த கனமழையால் அம்மாநிலத்தின் பல இடங்கள் வெள்ளத்தால் மூழ்கியும், நிலச்சரிவால் பலத்த சேதமும் ஏற்பட்டுள்ளது

கேரள மக்களின் துயர் துடைக்க கோலிவுட் திரையுலகினர் தாராளமாக நிதிவழங்கி வருகின்றனர். இந்த நிலையில் ஏற்கனவே கேரள வெள்ள நிதியாக ரூ.10 லட்சம் கொடுத்த நடிகர் விஷால் நேற்று தனது 'சண்டக்கோழி 2' குழுவினர்களுடன் மதுரை மீனாட்சியம்மன் கோவிலுக்கு சென்று கேரள மக்களுக்காக வழிபாடு செய்தார். இந்த வழிபாட்டில் 'சண்டக்கோழி 2' இயக்குனர் லிங்குசாமி உள்பட படக்குழுவினர் பலர் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் 'சண்டக்கோழி 2' திரைப்படத்தின் முதல் சிங்கிள் பாடல் வரும் 20ஆம் தேதி வெளியாகும் என்று சற்றுமுன்னர் அறிவிக்கப்பட்டுள்ளது. யுவன்ஷங்கர் ராஜாவின் இசையில் உருவாகியுள்ள இந்த பாடல் நல்ல வரவேற்பை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More News

'சீமராஜா'வுக்கு அடுத்த சிவகார்த்திகேயன் பட டீசர் ரிலீஸ் தேதி அறிவிப்பு

சிவகார்த்திகேயன், சமந்தா நடிப்பில் பொன்ராம் இயக்கியுள்ள 'சீமராஜா' திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில்

பீச் என்ன பிரஸ்மீட் வைக்கும் லொகேஷனா? கஸ்தூரி

மெரீனா பீச் என்றாலே அனைவருக்கும் ஞாபகம் வருவது உலகின் இரண்டாவது நீளமான கடற்கரை என்பதுதான். ஆனால் அதற்கு அடுத்ததாக ஞாபகம் வருவது அண்ணா மற்றும் எம்ஜிஆர் சமாதிதான்

'செக்க சிவந்த வானம்' பொன்னியின் செல்வன் கதையா?

மணிரத்னம் ஏற்கனவே இயக்கிய ஒருசில படங்கள் வரலாறு மற்றும் சரித்திர சம்பவங்களை தழுவி இருக்கும் என்பது அவரது படத்தை ஆழமாக பார்ப்பவர்களுக்கு புரிந்திருக்கும்.

சொந்த மாநில மக்களுக்கு நயன்தாரா செய்த மிகப்பெரிய உதவி

கோலிவுட் திரையுலகில் லேடி சூப்பர் ஸ்டாராக இருந்தாலும் நடிகை நயன்தாராவின் சொந்த மாநிலம் கேரளா என்பது தெரிந்ததே. இந்த நிலையில்

முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் இறுதி ஊர்வலம் தொடங்கியது.

முன்னாள் பிரதமர் வாஜ்பாய் அவர்கள் நேற்று மாலை டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் காலமானதை அடுத்து அவரது உடல் அவரது வீட்டிற்கு நேற்று எடுத்து செல்லப்பட்டது.