காட்பாதருக்கு இணையானது 'சண்டக்கோழி 2: விஷால்
Send us your feedback to audioarticles@vaarta.com
விஷால், கீர்த்திசுரேஷ் நடிப்பில் இயக்குனர் லிங்குசாமி இயக்கிய 'சண்டக்கோழி 2' படத்தின் இசைவெளியீடு நேற்று சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர். இந்த விழாவில் பேசிய நடிகர் விஷால் இந்த படம் காட்ஃபாதருக்கு இணையாக வந்துள்ளதாக பெருமிதம் கொண்டார். அவர் மேலும் பேசியதாவது:
25படங்களில் என்னோடு பணியாற்றிய அனைவருக்கும் என் வணக்கத்தை தெரிவித்துக்கொள்கிறேன். சண்டக்கோழி பாகம் ஒன்னு எனக்காக எழுதப்பட்ட கதை அல்ல.அது விஜய் மற்றும் சூர்யாவுக்காக எழுதப்பட்டது. கதை பற்றி கேள்வி பட்டதும் லிங்குசாமி எனக்கு இருபது வருட நண்பர் அந்த உரிமையில் அந்த படத்தை நான் நடிக்கின்றேன் என்று கூறினேன் அப்போது செல்லமே படம் வெளிவரவில்லை. சண்டக்கோழியில் என்னை ஆக்ஷன் ஹீரோவாக நிறுத்திவிட்டார். அங்க தொடங்கியதுதான் என் வாழ்கை.
கனல் கண்ணன் மாஸ்டர் அந்த படத்தில் கொடுத்த தைரியம் ஆக்ஷன் ஹீரோவாக என்னை வெளிப்படுத்தியது. தாவணி போட்ட தீபாவளி பாடல் என்னை பட்டி தொட்டியெல்லாம் கொண்டு போய் சேர்த்தது. பிறமாநிலத்திலும் பந்தைய கோழி என்று வெளியிட்டார்கள். லிங்குசாமி நினைத்திருந்தால் பெரிய ஹீரோவை வைத்து படம் எடுத்திருக்கலாம். என் அப்பா நினைத்திருந்தால் அப்படத்தை காப்பி ரைட்சுக்கு பல கோடிக்கு விற்பனை செய்திருக்கலாம். ஆனால் என் அப்பா என்னை தெலுங்கிலும் ஹீரோவாக நிறுத்த நினைத்தார் அங்கு இரண்டு வாரத்திற்கு கூட்டம் இல்லை மூன்றாவது வாரத்திலிருந்து அலை மோத ஆரம்பித்தனர். அன்று முதல் 24 படம் முடித்து 25வது படத்திற்காக உங்கள் முன்னால் நிற்கின்றேன். அதுவும் சண்டை கோழியே 25வது படமாக அமைந்தது தான் எனக்கு சாதனையாக தோன்றுகிறது.
கீர்த்தி அவர்களுடைய மற்ற படங்களை பார்த்து இருக்கின்றேன். அவர்களுடைய மகாநதி பார்த்தேன் அதை பார்த்து அவருக்கு தேசிய விருது கிடைக்கும் என கூறினேன். அவருடன் நடித்தது எனக்கு சந்தோசமாக உள்ளது. கீர்த்தி சுரேஷ் எழுத்தாளர். நான் படம் இயக்குவேனோ இல்லையோ கட்டாயம் கீர்த்தி சுரேஷ் இயக்குநராக வளம் வருவார்.
வீட்டில் எங்க அப்பாவை எப்படி பார்த்தேனோ அதே போல் செட்டில் ராஜ்கிரன் சாரை பார்த்தேன். லிங்குசாமி என்னிடம் கேட்டார் இரண்டாம் பாகத்தில் சக்தி தான் கேமரா மேன் சரியா என்று கேட்டார். உனக்கு யாரை தோனுகிறதோ அவர்களை வைத்துக்கொள் என்றேன். சக்தி மீது வைத்த நம்பிக்கை வீண் போகவில்லை அதைவிட இரண்டு மடங்கு வேலை செய்துள்ளார். இந்த படத்தை முதலில் என்னிடம் சொன்னது தயாரிப்பாளர் பிரவீன் தான். நான் இயக்குநராக வரவேண்டும் என நினைத்தேன் என்னை ஹீரோவாக மாற்றிய அனைவருக்கும் நன்றி.
பிரபு சாருடனோ, ராஜ்கிரன் சாருடனோ நடிக்கும் போதும் பாலா சார் இயக்கத்தில் நடிக்கும் போதும் அவ்வப்போது என்னை நானே கிள்ளி பார்ப்பேன். சண்டக்கோழி -2, பந்தையம்கோழி-2 இரண்டுமே அக்டோபர்-18ல் வெளிவரவுள்ளது. அதுவும் ஆயுத பூஜை அன்று.பெரிய அளவில் வெளிவரவுள்ளது. 2000பிரிண்ட் போட்டு கோலாகலமான திருவிழா போன்று வெளிவரும். பணியாற்றிய அனைத்து கலைஞர்களுக்கும் என் நன்றி. அனல் அரசு மாஸ்டர் மூலியமாக உடலில் 100 தையல் வந்து விட்டது. தயாரிப்பாளர் சங்கம் மூலமாக ஒரு வேண்டுகோள் தயவு செய்து படம் வெளிவந்து மூன்று நாள் கழித்து விமர்சனம் எழுதினால் சிறிய, பெரிய படத்திற்கு ஒரு நல்ல இடம் கிடைக்கும்' என்று விஷால் பேசினார்
இதே விழாவில் இயக்குனர் லிங்குசாமி பேசியதாவது: நேற்று விஷால் இந்த படத்தை பார்த்து இதில் நடித்தவர்கள் எல்லாரும் அப்படியே உள்ளனர் பதிமூன்று வருடம் ஆனது போல் தெரியவில்லை என்றார். எனக்கும் அப்படிதான் தோன்றுகிறது. போன படத்தின் பேஜ் ஒர்க்குக்காக கூப்பிட்டாலும் வந்துவிடுவார் எவ்வளவு வேலை, இரண்டு சங்கத்திலும் தலைமை பொருப்பு அதையும் தாண்டி இப்படி மெய்ண்டன் பண்ணுவது மிக பெரிய விஷியம். அது அவர்கள் அப்பாவிடம் இருந்து வந்தது அவரும் எப்போதும் சரியாக இருப்பார். எனக்கு முதலில் இருந்தே ஜி.கே பேக்டரி இருக்கும் போதே, நான் முதல் படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றிய போதே தெரியும். அவரை தம்பி,முதலாளி, நண்பன் என எப்படி வேண்டுமானாலும் அழைப்பேன்.
சண்டக்கோழி முதல் பாகம் நடித்த விஷாலை இரண்டாம் பாகத்திலும் உணர்ந்தேன். அவர் அந்த இடத்தில் நடிக்க கூடியவர். மற்ற இயக்குநர்கள் எப்படி என எனக்கு தெரியாது ஆனால் நான் உணர்ந்தேன். முதல் பாகத்தில் அதிகமாக மெனக்கிடல் செய்தேன். இரண்டாம் பாகத்தில் அனைவரும் நன்றாக நடித்துள்ளார்கள் நான் சூர்யா, மாதவன், அஜித் சாருடன் வேலை செய்துள்ளேன். அதன் பின் இவருடன் வேலை செய்யும் பொழுது ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொருவர் வருவதை உணர்ந்தேன். இனி கதை மட்டுமே அவருக்கு சரியான முறையில் அமையும். எனக்கும் விஷாலுக்கும் இது அருமையான படமாக அமையும் அப்படியொரு குழு அமைந்தது அவ்வளவு உழைப்பை போட்டுள்ளோம். நான் கேட்டதை அனைத்தும் செய்து கொடுத்த தயாரிப்பாளருக்கு நன்றி.
ஒரு வார்த்தையில் கவிதை சொல்ல வேண்டும் என்றால் கீர்த்தி. கீர்த்தி சுரேஷுடன் வேலை பார்த்தது சாவித்திரியுடன் வேலை பார்த்தது போல இருந்தது. மீரா ஜாஸ்மீன் அவர் இடம், ஹீரோ அவர் இடம், வில்லன் இடம் இது அனைத்தும் சரியாக அமைய வேண்டும் என நினைத்தேன்.எனக்கு சவாலாக அமைந்தது மீராஜாஸ்மீன் கதாபாத்திரம் தான் சரியாக அமைய வேண்டும் என நினைத்தேன். கீர்த்தி தான் சரியாக இருப்பார் என தோன்றியது. இசையமைப்பாளர் யுவன் சங்கர்ராஜா அவரை எனக்கு மிகவும் பிடிக்கும். அவர் இசையமைத்த இரும்புத்திரையும் அவர் தயாரித்த படமும் பெரிய வெற்றியை தந்தது. மதன் கார்கி எழுதிய பாடலுக்கு மூன்று நிமிடத்தில் இசையமைத்து கொடுத்தார். பாடல் அருமையாக வந்துள்ளது. முத்துக்குமார் அவர் இப்போது இல்லை அவருக்கு நிகராக அருண்பாரதி, ஏகாதசி உள்ளனர்' என லிங்குசாமி பேசினார்.
இறுதியில் நடிகை கீர்த்திசுரேஷ் பேசியபோது, 'லிங்குசாமி சாருக்கு தான் முதலில் நன்றி சொல்ல வேண்டும். இந்த கதை கேட்கும் போது ரொம்ப டென்ஷனாக இருந்தேன் மீராஜாஸ்மீன் மேடம் பற்றி எல்லாருக்கும் தெரியும் சண்டைகோழி முதல் பாகத்தில் எப்படி நடித்திருப்பார் என்று. அதை நான் எப்படி பண்ண போகிறேன் என்ற பயம் இருந்தது அந்த கதாப்பாத்திரம் கேட்ட பின் அதற்கு நிகராகவாது நடிக்க வேண்டும் என தோன்றியது. மகாநதி படப்பிடிப்பின் போதும் இந்த படம் தான் எனக்கு பெரிய ரிலாக்ஷாக இருந்தது. விஷால், லிங்குசாமி அவர்களுடன் படப்பிடிப்பு ரொம்ப மகிழ்ச்சியை தந்தது. மகாநதிக்கு பின் நான் விருப்பி நடித்த படம் சண்டைகோழி-2 தான். பிருந்தா சார் ஒவ்வொரு வசத்தையும் அதற்கேற்றவாரு எனக்கு சொல்லிகொடுத்தார். படத்தில் பாடல் எழுதிய அனைத்து பாடலாசிரியர்களுக்கும் நன்றி. யுவன் அவர்களுடைய இசையில் அனைத்து பாடல்களும் அருமையாக வந்துள்ளது. யுவனுக்கு நன்றி. பிரவீன் சாருக்கு நன்றி. விஷால் எனக்கு இந்த படத்தின் மூலம் நண்பர் கிடைத்துள்ளார் அவருக்கும் நன்றி. சக்தி அனைவரையும் அழகாக காட்டியுள்ளார். நன்றி என கீர்த்திசுரேஷ் பேசினார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com