close
Choose your channels

விஷால் ரசிகர்களுக்கு இன்று இரட்டை மகிழ்ச்சி

Friday, May 11, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

விஷால் நடித்த 'இரும்புத்திரை' திரைப்படம் இன்று தமிழ், தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளிலும் உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியாகிறது. கடந்த புதன் அன்று பாதி திரைப்படம் பத்திரிகையாளர்களுக்காக திரையிடப்பட்டு நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் இன்று வெளியாகும் இந்த படத்திற்கு நல்ல எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. விஷாலின் வெற்றிப்பட பட்டியலில் இந்த படம் இணையும் என்று விஷால் ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

இந்த நிலையில் விஷால் நடித்து கொண்டிருக்கும் இன்னொரு படமான 'சண்டக்கோழி 2' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று கொண்டிருக்கின்றது என்பதும் இந்த படத்தை முதல் பாகத்தை இயக்கிய லிங்குசாமி இயக்கி வருகிறார் என்பதும் தெரிந்ததே. இந்த நிலையில் சண்டக்கோழி 2 படத்தின் டிரைலர் இன்று, 'இரும்புத்திரை' திரையிடப்படும் திரையரங்குகளில் திரையிட ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

இந்த தகவல் விஷால் ரசிகர்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சிக்கு காரணமாகியுள்ளது. சண்டக்கோழி படத்தின் முதல் பாகம் சூப்பர் ஹிட் ஆன நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் இன்று இந்த படத்தின் டிரைலர் வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

விஷால் , கீர்த்திசுரேஷ் , ராஜ்கிரண், வரலட்சுமி சரத்குமார், கஞ்சா கருப்பு, மற்றும் முதல் பாக நாயகி மீரா ஜாஸ்மின் உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு யுவன்ஷங்க ராஜா இசையமைத்துள்ளார். சக்திவேல் ஒளிப்பதிவில், பிரவீண் படத்தொகுப்பில் உருவாகி வரும் இந்த படத்தை விஷால் பிலிம் பேக்டரி தயாரித்து வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment