close
Choose your channels

விஷாலின் 'சண்டக்கோழி 2' படத்தின் இயக்குனர் இவர்தான்

Sunday, June 26, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

விஷால் நடிப்பில் இயக்குனர் லிங்குசாமி இயக்கிய சண்டக்கோழி' திரைப்படம் சூப்பர் ஹிட் ஆன நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகம் குறித்த பேச்சுவார்த்தை கடந்த சில வருடங்களாக நடந்து வந்தது. இந்நிலையில் இவ்வருட ஆரம்பத்தில் இந்த படம் தொடங்குவதாக இருந்தது. ஆனால் விஷால் மற்றும் லிங்குசாமி இடையே ஏற்பட்ட சில மனஸ்தாபங்களால் அந்த படம் கைவிடப்பட்டதாக விஷால் தனது சமூகவலைத்தளத்தில் தெரிவித்தார்.
இந்நிலையில் 'சண்டக்கோழி 2' படம் குறித்த பேச்சுவார்த்தை மீண்டும் தொடங்கவுள்ளதாகவும், விஷாலும் லிங்குசாமியும் சமாதானமாகிவிட்டதாகவும் கடந்த சில நாட்களுக்கு முன் தகவல்கள் வெளிவந்தது. இந்த தகவலை உறுதிப்படுத்தும் வகையில் தற்போது விஷாலின் அடுத்த படம் 'சண்டக்கோழி 2' தான் என்றும் அதை இயக்குவது லிங்குசாமிதான் என்றும் உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து முறையான அறிவிப்பை இன்னும் ஒரு சில நாட்களில் அறிவிக்கவிருப்பதாக விஷால் தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment