சந்தானம் அடுத்த படத்தின் செம அப்டேட்: வைரல் புகைப்படங்கள்!
Send us your feedback to audioarticles@vaarta.com
சந்தானம் நடித்து வரும் முக்கிய திரைப்படத்தின் செம அப்டேட்டை படக்குழுவினர் வெளியிட்டுள்ள நிலையில் இதுகுறித்த புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாகி வருகிறது.
தமிழ் திரையுலகில் காமெடி நடிகராக அறிமுகமாகி தற்போது ஹீரோவாக வெற்றி படங்களை தந்து கொண்டிருப்பவர் நடிகர் சந்தானம். இவரது நடிப்பில் உருவாகியிருக்கும் ’ஏஜென்ட் கண்ணாயிரம்’ ’குலுகுலு’ ஆகிய திரைப்படங்கள் ரிலீஸுக்கு தயாராக உள்ளன.
இந்த நிலையில் சந்தானம் நடிப்பில் பிரசாந்த் ராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்தது. இந்தப் படத்தில் சந்தானம் ஜோடியாக தன்யா ஹோப் நடித்துள்ளார் என்பதும், மேலும் இந்த படத்தில் ராகினி திவேதி, பாக்யராஜ், செந்தில், கோவை சரளா, மனோபாலா உள்ளிட்டோரும் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ், தெலுங்கு மற்றும் கன்னடம் ஆகிய மூன்று மொழிகளில் உருவாகி வரும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு சென்னை, லண்டன், பாங்காங் உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்று வந்த நிலையில் தற்போது இந்த படத்தின் ஒட்டுமொத்த படப்பிடிப்பும் முடிந்து விட்டதாக படக்குழுவினர் அப்டேட் தந்துள்ளனர். விரைவில் இந்த படத்தை திரையில் எதிர்பார்க்கலாம் என்று படக்குழுவினர் தெரிவித்துள்ளதால் சந்தானம் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
The Shooting of #Santa15 wrapped up. Get ready to witness this fun entertainer ?? More updates coming soon.
— Johnson PRO (@johnsoncinepro) June 30, 2022
A @iamprashantraj Film ??@iamsanthanam @TanyaHope_offl @raginidwivedi24 @ArjunJanyaMusic #FortuneFilms #ProductionNo10 @johnsoncinepro pic.twitter.com/MwsCvS2YxO
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments