close
Choose your channels

கலாஷேத்ராவுக்கு சப்போர்ட் செய்த அபிராமி.. பதிலடி கொடுத்த சனம்ஷெட்டி..!

Saturday, April 8, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கலாஷேத்ராவுக்கு ஆதரவாக நடிகையும், பிக் பாஸ் போட்டியாளருமான அபிராமி பேசிய நிலையில் அவருக்கு மற்றொரு பிக்பாஸ் போட்டியாளரான சனம் ஷெட்டி பதிலடி கொடுத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சமீபத்தில் சென்னை கலாஷேத்ரா கல்லூரியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்டதாக நான்கு பேராசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த விஷயம் பெரும் பரபரப்பு ஏற்படுத்திய நிலையில் கலாஷேத்ராவின் முன்னாள் மாணவியான அபிராமி வெங்கடாச்சலம் ’எப்பொழுதும் ஒரு பக்கம் மட்டுமே இருந்து ஒரு விஷயத்தை பார்க்க கூடாது, பேராசிரியர்கள் பக்கமும் இருந்து பார்க்க வேண்டும். 80 வருட பாரம்பரிய மிக்க கலாஷேத்ராவின் முன்னாள் மாணவி என்ற வகையில் அங்கு எந்த விதமான தவறும் நடந்துருக்க வாய்ப்பில்லை என்றும் கூறியிருந்தார்

அபிராமி வெங்கடாசலத்தின் இந்த கருத்துக்கு நெட்டிசன்கள் பலர் கண்டனம் தெரிவித்திருந்த நிலையில் தற்போது பிக் பாஸ் போட்டியாளர்களில் ஒருவரான சனம் ஷெட்டியும் தனது கருத்து தெரிவித்துள்ளார். அதில் ’ஆணவம் மற்றும் அறியாமையான பேச்சு, பேச விருப்பமில்லை என்றால் பேசாமல் இருங்கள். உங்களுக்கு எதுவும் நடக்கவில்லை என்றால் அது அவர்களுக்கு நடக்கவில்லை என்று அர்த்தம் இல்லை, 89 வருடங்களாக நீங்கள் அந்த கல்லூரியில் இருந்தீர்களா? அங்குள்ள ஒவ்வொரு ஆசிரியரின் ஒவ்வொரு செயலுக்கும் உங்களால் உத்தரவாதம் அளிக்க முடியுமா? நீங்கள் ஏன் ஒரு பக்கம் மட்டும் இருக்கிறீர்கள்? உண்மைக்காக காத்திருங்கள்’ என்று கூறியிருந்தார்.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment